கொரோனா!  மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட"நிதிஅமைச்சர்"..! கடும் அதிருப்தியில் உலக நாடுகள்!  

பொருளாதார பிரச்சனையை சமாளிக்க முடியாமல் ஜெர்மனியின் நிதியமைச்சர் மன உளைச்சலால்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பய் ஏற்படுத்தி உள்ளது 

ஜெர்மனியில் கொரோனா பரவல் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 450 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், தற்போது அங்கு கட்டுக்குள் இருந்தாலும்150 கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இதன் காரணமாக வர்த்தகம் முடங்கி விட்டது. பொருளாதாரம்  மந்தமாகி விட்டது. நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறும் நேரமாகி விட்டது. இதன் காரணமாக கடந்த  சில நாட்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் ஜெர்மனி, மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் (வயது 54). 8 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாகாணத்தின் நிதியமைச்சராக கடந்த 10 ஆண்டுகாலமாக இருந்து வரும் தாமஸ், கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை எவ்வாறு சரிசெய்யப் போகிறோம் என மன உளைச்சலில் இருந்து உள்ளார்

இந்த ஒரு தருணத்தில் இவரின் உடல் கடந்த சனிக்கிழமையன்று பிராங்பேர்ட்டுக்கு அருகிலுள்ள ஹோச்ஹெய்ம் பகுதி ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது 

இது குறித்து ஹெஸ்ஸி மாகாண தலைவர் வோல்கர் பூஃபியர் தெரிவிக்கும் போது ...

கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் தாமஸ். நிலைமையை  எப்படி சமாளிக்க போகிறோம் என இரவு பகல் பாராமல் உழைத்து வந்தார். அவருடைய ஆலோசனை  எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இந்த ஒரு நிலையில் திடீரென  தற்கொலை செய்துகொண்ட அவருடைய முடிவு எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.. இது எங்களுக்கு பேரிழப்பு என  தெரிவித்து உள்ளார். ஒரு மாகாணத்தின் நிதி அமைச்சரே இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்தது  மற்ற நாடுகளை அஞ்ச வைத்துள்ளது