டெல்லி மாநில வாக்காளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இலவச விமான டிக்கெட்டை வழங்குகிறது.
விமானத்தில் இலவசப் பயணம்…ஸ்பைஸ் அதிரடி அறிவிப்பு….ஆனால், ஒரு நிபந்தனை….?
டெல்லியில் வரும் 8-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் டெல்லி மாநில மக்களுக்கு விமானத்தில் இலவசப் பயணம் அளிக்கப்படும் என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 8ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்சிகளின் இறுதிக்கட்ட பிரச்சாரங்களும் சூடு பிடித்துள்ளன.
டெல்லி மாநில வாக்காளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இலவச விமான டிக்கெட்டை வழங்குகிறது.
வேலைநிமித்தம் காரணமாக டெல்லியைச் சேர்ந்தவர்கள் வேறு பகுதிகளில் இருந்தால் அவர்கள் வரும் 8ம் தேதி அன்று டெல்லிக்குச் செல்ல ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம். இதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்தலில் வாக்களிக்க 8ம் தேதி பயணிப்பவர்களுக்கு மட்டுமே இலவச டிக்கெட் வழங்கப்படும். ஆனால், 8ம் தேதியே டெல்லிக்குச் சென்று அன்றைய தினமே திரும்பி வரும்பட்சத்தில் போக்கு, வரத்து டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வாக்களிப்பது ஜனநாயகத்தின் முக்கிய கடமை. மக்கள் பலர் வேலை காரணமாக வேறு இடங்களில் வேலை செய்வதால் அவர்களால் உடனடியாக சொந்த ஊருக்கு வாக்களிக்க வர முடியாது. எனவே, ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்கும் பொருட்டு, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது' என்று அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஜய்சிங் தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 5, 2020, 7:03 PM IST