for girls protection introduced suraksha

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருதி, பிரத்யேக ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

இதன் மூலம் இனி வரும் காலங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள எம்.ஜி ரோடு மற்றும் பிரிகேடியர் ரோடு ஆகிய பகுதிகளில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது . இதனை தொடர்ந்து தற்போது, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு புதிய ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது அரசு.

அதாவது “பிங்க் ஹோசலாஸ்” என்ற ரோந்து வாகனங்களை அறிமுகப்படுத்த பெங்களூரு காவல்துறை முடிவெடுத்துள்ளது.இந்த சிறப்பு வாகனத்தை, பெண்களுக்கு எதிராக எந்த பகுதியில் அதிக குற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறதோ, அந்த இடத்தில் இந்த சிறப்பு வாகனத்தை நிறுத்தி வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட பெங்களூர் காவல் துறை முடிவு செய்துள்ளது . அதற்காக 51 “பிங்க் ஹோசலாஸ்” வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த வாகனத்தில் 3 பெண் காவலர்கள் இருப்பார்கள். பெண்கள் அதிகம் கூடும் இடமான கோவில், மால்கள் உள்ளிட்ட பல இடங்களில் இந்த வாகனத்தை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் .

மேலும், இதற்காக “சுரக்ஷா“ என்ற சிறப்பு செயலியையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் புகார் தெரிவித்தால், காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.