கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தொலைக்காட்சிகளில் வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தன் குடும்பத்துடன் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.இதை சுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.

T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தொலைக்காட்சிகளில் வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தன் குடும்பத்துடன் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.இதை சுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மக்களின் நலன் கருதி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாடு பயணத்தில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் வேளையில், தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் குடும்பத்தினர் கொரோனா குறித்த எச்சரிக்கையை அறிந்த பின்பு தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். 
கடந்த 10 நாட்களுக்கு முன்பாக லண்டன் சென்று வந்த நடிகை ஸ்ருதிஹாசன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதேபோல் அவரது தாயார் சரிகா மும்பை வீட்டிலும், தந்தை கமல்ஹாசன், சகோதரி அக்‌ஷராஹாசன் ஆகியோர் சென்னையில் தனித்தனி வீட்டிலும் இருக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு பயணம் சென்றுவந்ததால் இந்த முடிவை எடுத்திருக்கிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார் சுருதிஹாசன்.