Baby Talk: பெற்றோர்களுக்கு நம் குழந்தை வேகமாக பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கு என்ன செய்வது என்று பலருக்கும் தெரியாது. அதற்கான டிப்ஸ் இங்கே பார்த்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

பெற்றோர்களுக்கு நம் குழந்தை வேகமாக பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும். குழந்தை தன் வாயால் அம்மா, அப்பா என்று சொல்லும் போது வரும் இன்பம் என்பது அளவற்றது. அதற்கு ஈடு இணையே கிடையாது என்று சொல்லலாம்.ஒவ்வொரு பெற்றோரும் அதைத் தான் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால், அதற்கு என்ன செய்வது என்று பலருக்கும் தெரியாது. அதற்கான டிப்ஸ் இங்கே பார்த்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

1. உங்கள் குழந்தைகளின் முகத்தை பார்த்து அடிக்கடி பேச வேண்டும். நாம் மீண்டும், மீண்டும் அவர்கள் முன் பேசும்போது, குழந்தைகள் பேச ஆர்வம் காட்டுவார்கள். 

2. எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியாக பேசுவது கிடையாது. குழந்தைக்கு..குழந்தை மாறுபடும். அம்மா...அப்பா என்ற வார்த்தையை அழுத்தமாக உச்சரிக்கும் போது, அது குழந்தைகளின் மனதில் பதியும்.

3.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவர்களிடம் கொஞ்சி பேசி வரலாம். அதே மாதிரி குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் போது அவர்கள் பக்கத்தில் இருந்து சைகை மூலமாக பேச கற்றுக்கொடுங்கள். 

4. குழந்தைகள் எப்பொழுதும் பாடல்கள் வழியாக எளிதாக பேச்சை கற்றுக் கொள்கின்றனர். எனவே உங்கள் குழந்தைகளுக்கு பாடல்களை பாடுவது நல்லது. அதன் வரிகள் எளிதாக அவர்களின் மனதில் இருக்கும். 

5. குழந்தைகளுக்கு முதலில் வார்த்தைகளை சொல்லும் போது எளிய நடையில் சொல்லிக் கொடுங்கள். வார்த்தைகளை அதற்கான படங்களை சுட்டிக் காட்டி சொல்லிக் கொடுக்கலாம். உதாரணமாக, நபர்களின் பெயர்களைக் கூறும்போதும் அவர்களை சுட்டிக் காட்டி சொல்லிக் கொடுக்கலாம்.

6. குழந்தைகளுக்கு புத்தம் வழி பேசுவதற்கு கற்று கொடுங்கள். புத்தகம் படிப்பதின் மூலம், அதில் இருக்கும் வார்த்தைகளை அடிக்கடி சொல்லி உச்சரியுங்கள். இது அவர்களுக்கு சிறு வயதிலேயே படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

 மேலும் படிக்க.....Guru Peyarchi 2022: இன்று குரு பெயர்ச்சி...இந்த ராசியினர் மீது குபேரனின் நேரடி அருள் பொழியும்...ஜாக்பாட் யோகம்