ஓவரா திங் பண்றீங்களா? அதிலிருந்து விடுபட ஜப்பானியர்களின் 7 உத்திகள்.. ஒருமுறை ட்ரை பண்ணி தான் பாருங்களே..!
Japanese Techniques To Help Stop Overthinking :நீங்கள் பலமுறை முயற்சித்தும் கூட ஓவர் திங்கில் இருந்து விடுபட முடியவில்லை என்றால், அதை தடுப்பதற்கான சில பயனுள்ள ஜப்பானிய நுட்பங்களை பின்பற்றுங்கள். அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
சிலர் சிறிய விஷயங்களுக்கு கூட அதிகம் சிந்திப்பார்கள். இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவது மட்டுமின்றி, மூளையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக அவர் சில நேரங்களில் சோர்வாக உணர வாய்ப்பு அதிகம். எதையாவது அதிகம் சிந்திப்பது, நாள் முழுவதும் அதையே மனதில் வைத்து கவலைப்படுவது போன்றவை நீண்ட காலத்திற்கு அதிகமாக சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும். ஒரு விஷயத்தைப் பற்றி மன அழுத்தத்தை எடுத்துக் கொள்வது மனித இயல்பு. ஆனால், இந்த இயல்பு அதிகமாகிவிட்டால், அது மனநோய் பிரிவில் வைக்கப்படும். இது ஓவர் திங்கிங் என்று அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் ஜப்பான் மக்களின் வாழ்க்கை முறை உலகிலேயே மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. மற்றும் அவர்கள் ரொம்பவே ஆரோக்கியமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். காரணம் அவர்களிடம் ஓவர் திங்கிங் பழக்கம் இல்லை. எனவே, நீங்கள் பலமுறை முயற்சித்தும் கூட ஓவர் திங்கில் இருந்து விடுபட முடியவில்லை என்றால், அதை தடுப்பதற்கான சில பயனுள்ள ஜப்பானிய நுட்பங்களை பின்பற்றுங்கள். அவை நிச்சயம் உங்களுக்கு உதவும். சிறப்பு என்னவென்றால், இந்த நுட்பங்கள் மிகவும் எளிமையானது மற்றும் வேடிக்கையானது. சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில், ஓவர் திங்கில் இருந்து விடுபட ஜப்பானியர்களின் 7 நுட்பங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஜப்பானியர்கள் 100 வயசையும் தாண்டி வாழ்வதற்கான ரகசியம் இதுதாங்க..!!
ஓவர் திங்கில் இருந்து விடுபட 7 ஜப்பானிய நுட்பங்கள்:
1. Shoganai : பலர் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களை குறித்து கவலைப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில், ஜப்பானியர்களின் இந்த 'Shoganai' நுட்பம் உதவும். அதாவது, இந்த நுட்பம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறது. குறிப்பாக, உங்கள் கட்டுப்பாட்டு இல்லாத விஷயங்களில் ஒரு போது நேரத்தை வீணடிக்காதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் வாழ்க்கை ஏதாவது சிறப்பாக செய்யக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். மேலும் எப்போதும் நுண்ணோக்கிய சிந்தியுங்கள். நீங்கள் இந்த முறையை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.
2. Shirin-yoku : இந்த பிசியான வாழ்க்கையில் நீங்கள் சோர்வாகவோ அல்லது சலிப்பாகவோ உணர்ந்தால் இயற்கையில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதாவது இயற்கையின் மடியில் உள்ள பசுமைகளில் உங்களை மூழ்கடிப்பது அதிக சிந்தனையை தவிர்ப்பதற்கான சிறந்த வழி என்று இந்த நுட்பம் நம்புகிறது. எனவே, நீங்கள் மலைகளை பார்ப்பதும், நதிகளை ரசிப்பதும், பசுமை மத்தியில் வாழ்வதும் உங்களுக்கு நிம்மதியைத் தரும்.
3. Nenbutsu : இது ஒரு ஈர்க்கக்கூடிய நுட்பம். இதன் மூலம் நீங்கள் அதிகமாக சிந்திக்கும் விஷயங்களில் இருந்து உங்களது கவனத்தை திசை திருப்பும். சொல்ல போனால்,இது உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தும் ஒரு வகையான தியானம் ஆகும். உங்களை அதிகமாக சிந்திப்பதை தடுக்கவும், உங்களது மனதை அமைதி படுத்தவும் இது உதவுகிறது. முக்கியமாக உங்களை சுற்றி உள்ள விஷயங்களில் நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பீர்கள்.
4. Zazen என்பது தியானத்தின் ஒரு நுட்பமாகும். இந்த நுட்பம் பௌத்த மதத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இது பெரிய அளவில் நடைமுறையில் உள்ளது. முக்கியமாக இந்த நுட்பம் தேவையற்ற விஷயங்களை பற்றி அதிகம் யோசிப்பதை தவிர்க்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், இந்த நுட்பத்தின் மூலம் உங்களது எண்ணங்களை கட்டுப்படுத்தலாம். இதனால் மனமும் அமைதி அடையும்.
5. Gaman : இந்த நுட்பத்திகு விடாமுயற்சி என்று பெயர். ஏனெனில், இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மை பலவீனமாக எண்ணக் கூடாது என்று இது நமக்கு கற்பிக்கிறது. எனவே, சிரமங்களை வலிமையுடன் எதிர்கொள்ளுங்கள். இந்த நுட்பத்தை பின்பற்றினால் வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சனைகள் கூட உங்கள் கண்ணுக்கு சிறியதாக தோன்றும். முக்கியமாக பிரச்சனையை பற்றி அதிகம் சிந்திக்காமல், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது கவனம் செலுத்தவும், சிக்கலுக்கு அடிப்படை விட அதை எவ்வாறு கையாளுவது என்பதை அறியவும் இது உதவுகிறது.
6. Wabi - sabi : இது ஒரு சக்தி வாய்ந்த ஜப்பானிய நுட்பம் ஆகும். இது வாழ்க்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ள நம்மை தயார்படுத்துகிறது. முக்கியமாக இந்த நுட்பத்தை பின்பற்றுபவர்கள்
அதிகமாக சிந்திப்பதை தவிர்ப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.
7. Ikebana : இது அதிகப்படியான சிந்தனையை அகற்றுவதற்கான ஒரு நுட்பம் ஆகும். நீங்கள் எதையாவது குறித்து அதிகம் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்களது கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, உங்களுக்கு பிடித்த பூக்களை வீட்டில் வாங்கி வளர்க்கலாம். இது உங்கள் மனதில் அழகான எண்ணங்களை கொண்டு வரும். இதனால் நீங்கள் டென்ஷனில் இருந்து வெளிப்படுவீர்கள். மேலும் உங்களது மனமும் அமைதியாக இருக்கும்.
இதையும் படிங்க: Friendship Marriage : ஜப்பானில் டிரெண்டாகும் இந்த திருமணத்தில் காதல் காமத்துக்கு மட்டும் 'நோ'.. ஏன் தெரியுமா?