இனி சென்னையிலிருந்து ஸ்ட்ரெயிட்டா சீரடிக்கு விமான சேவை..! ஸ்பைஸ் ஜெட் அதிரடி..! 

உலகம் முழுவதும்  நிறைந்து இருப்பவர்கள் சாய் பாபாவின் பக்தர்கள். சாய்பாபாவிற்கு மட்டும் எப்போது ஜாதி மதம் பேதமின்றி பக்தர்கள் பக்தர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாகவே பாபாவின் பக்தர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது சீரடிக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் அதிகம். அந்த வகையில்  தமிழகத்தில் இருந்து

 சீரடிக்கு செல்லும் பக்தர்களுக்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவையை தொடங்கி இருந்தது. அதன் பின்னர் நிர்வாக காரணங்களுக்காக முன்னறிவிப்பு இன்றி ஒருங் மாதத்திற்கு முன்னர் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் சேவையை தொடங்கி உள்ளது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம். இதன் காரணமாக பக்தர்கள் இனி மும்பை அல்லது புனே சென்று சீரடி செல்வதை விட நேரடியாகவே சீரடிக்கு செல்ல முடியும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்