இளமையிலேயே முதுமையான தோற்றம் அடைவது உணர்த்தும் 5 அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக வயது அதிகரிக்கும் போது தான் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். ஆனால் சில சமயங்களில் அந்த மாற்றங்கள் வயதாகிறதற்கு முன்பே இளமையிலேயே தோன்ற தொடங்கும். குறிப்பாக, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இளமையிலேயே முதுமையான தோற்றம் தெரியும் (early aging). கூடவே பல உடல்நல பிரச்சனைகளுக்கும் வரும்.
இத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடல் வேகமாக வயதாகிறதா? இல்லையா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே சில அறிகுறிகள் கீழே சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் உங்களது உடலில் தோன்ற ஆரம்பித்தால் காலத்திற்கு முன்பே உங்களது உடல் வயதாகிவிட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இளமையிலேயே முதுமை அடைவதை உணர்த்தும் அறிகுறிகள் :
1. எப்போதும் சோர்வாக உணர்வது
நீங்கள் போதுமான அளவு தூங்கி பிறகும் எப்போதுமே சோர்வாக உணர்ந்தால் சீக்கிரமாக முதுமை அடைகிறீர்கள் என்பதன் அறிகுறியாகும். இதற்கு வயதுக்கு ஏற்ப வளர்ச்சிதை மாற்றம் குறைதல், உடலில் போதுமான ஆற்றல் இல்லாமை, ஹார்மோன் சமநிலையின்மை, மோசமான வாழ்க்கை முறை மற்றும் வைட்டமின் டி அல்லது வைட்டமின் பி12 குறைபாடு போன்றவை காரணமாகும்.
என்ன செய்யலாம்?
- ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை சாப்பிட வேண்டும்.
- உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும்.
- தினமும் உடற்பயிற்சி, யோகா தியானம் செய்யவும்.
- மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு வைட்டமின் அளவை பரிசோதிப்பது நல்லது.
2. தொப்பை கொழுப்பு அதிகரிப்பு, தசை பலவீனம்
நீங்கள் எடை அதிகரிக்கவில்லை ஆனால் தொப்பையில் மட்டும் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்றாலோ, தசைகள் பலவீனமடைந்தாலோ அது வயதானதற்கான அறிகுறியாகும். வயது அதிகரிக்கும் போது தான் தசை பலவீனமடைந்து வயிற்றை சுற்றி கொழுப்பு சேர தொடங்கும். இது 30 வயதிற்கு பிறகு தான் தொடங்கும்.
என்ன செய்யலாம்?
- முட்டை, சிக்கன், பருப்பு, சீஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.
- வலிமையான உடற்பயிற்சி செய்யுங்கள்.
- சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்டு உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.
3. மூட்டு வலியும், விறைப்பும்!
எந்தவித காயமின்றி உங்களுக்கு மூட்டு வலி அல்லது விறப்புததன்மை ஏற்பட்டால் அது வயதானதற்கான அறிகுறியாகும். வயதிற்கு ஏற்ப எலும்புகளின் அடர்த்தி மற்றும் மூட்டுகளில் நிகழ்ச்சி குறைய ஆரம்பிக்கும். இதனால் கீழ்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
என்ன செய்யலாம்?
- வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- யோகா, நீச்சல் போன்ற குறைந்த தாக்கம் உள்ள பயிற்சிகள் மற்றும் நீட்சி பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்.
- ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும். அப்போதுதான் மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படாது.
4. நினைவாற்றல் இழப்பு
நீங்கள் அடிக்கடி விஷயங்களை மறந்தாலும் அல்லது கவனம் செலுத்துவதில் சிக்கல் இருப்பதாக உணர்ந்தாலோ அது வயதானதற்கான அறிகுறியாக இருக்கலாம். வயதுக்கு ஏற்ப மூளை செல் வளர்ச்சி குறையும். இதனால் நினைவாற்றல் செயல்பாடும் பாதிக்கப்படும்.
என்ன செய்யலாம்?
- தினமும் நினைவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கும் பயிற்சிகளை செய்யுங்கள் உதாரணமாக புத்தகங்கள், வாசிப்பு புதிர்களை தீர்ப்பது போன்றவை ஆகும்.
- மீன், வால்நட் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடவும்.
- தினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும் மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்கவும்.
5. வறண்ட சருமம்
தளர்வான சருமம், சரும வறட்சி, முகத்தில் சுருக்கங்கள் ஆகியவை வயதானதற்கான அறிகுறிகள் ஆகும். கொலாஜன் உற்பத்தி குறைவதால் தான் சருமம் அதன் நெகிழ்ச்சி தன்மையை இழக்கிறது.
என்ன செய்யலாம்?
- நிறைய தண்ணீர் குடியுங்கள்
- மது மற்றும் புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
- ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
- சன்ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்ரைசர் பயன்படுத்துவது நல்லது
குறிப்பு : மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றே நீங்கள் கண்டால் அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். அதுபோல ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் முன்கூட்டிய வயதாவதை தடுக்கலாம்.
