father begged to fullfilled her daughter dream
காவசார் ஹுசைன் என்பவர் ஒரு விபத்தில் தன் கையை இழந்தார். பின்னர்அவரால் எந்த வேலையும் சரி வர செய்ய முடியாத காரணத்தினால், ஒரு இக்கட்டான சூழ்நிலையில், பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் தன்னுடைய ஆசை மகளுக்கு, இரண்டு ஆண்டு காலமாக பிச்சை எடுத்துதான் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் மஞ்சள் நிறத்தில் ஒரு ஆடையை வாங்கி கொடுத்து , அந்த ஆடையை தன் மகளுக்கு அணிவித்து அழகு பார்த்துள்ளார் . மேலும் தன் மகளை தற்போது நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தும் வருகிறார் ஹுசைன்
இந்த பதிவை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட , தற்போது இந்த மனம் நெகிழும் செய்தி மக்களிடையே பேசப்பட்டு வருகிறது .
அதாவது , மகளின் மீதுள்ள அன்பினால் தனக்குக் கிடைக்கும் குறைந்த தொகையிலும் ஒரு தொகையை சேமித்து மகளுக்கு பரிசளித்த ஹூசைன் பற்றி ஜி.எம்.பி.ஆகாஷ் என்ற புகைப்படக்கலைஞர் தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளளர் .
அதுமட்டுமின்றி, அந்த தந்தை தன் மகளை ரசித்தபடி ஒரு புகைப்படம் எடுத்துகொள்வது போல் உள்ள ஒரு காட்சியையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
