மனிதனின் கண்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கண் என்பது நம்முடைய உடல் உறுப்பு முக்கியமான பகுதியாகும். எந்த வயதிலும் கண் பராமரிப்பு மிகவும் அவசியம். இல்லையெனில் பார்வை குறைபாடு பிரச்சனைகள் ஏற்படும். பார்வை குறைபாட்டால் பலர் கண்ணாடிகள் மற்றும் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவார்கள். சிலரோ அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், நம்முடைய கண்களைப் பற்றி நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு பல விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் தெரிந்து கொள்ளும்போது கண் எவ்வளவு அற்புதமானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். சரி இப்போது நம்முடைய கண்களைப் பற்றிய சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மனித கண்களைப் பற்றிய சுவாரசியமான உண்மைகள்:
1. நம்முடைய கண் தோராயமாக ஒரு அவுன்ஸ் எடையை கொண்டுள்ளன.
2. உலகளவில் 70-79 சதவீத மக்களுக்கு கண்கள் பழுப்பு நிறமாகவும், 8-10 சதவீத மக்களுக்கு கண்கள் நீல நிறமாகவும், 2% பேருக்கு பச்சை நிற கண்கள் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
3. நீல நிற கண்கள் பிற நிற கண்களை காட்டிலும் ஒளிக்கு ரொம்பவே சென்சிட்டுவாக இருக்கும்.
4. பொதுவாக பெரும்பாலான புதிதாகப் பிறந்த குழந்தைகள் அழுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் ஆனால் அவர்களுக்கு கண்ணீர் வராது. அதுவும் குறிப்பாக 6-8 வாரங்கள் வரை அவர்களுக்கு கண்ணீர் வராதாம். ஏனெனில், பிறப்புக்குப் பிறகும் அவர்களின் கண்ணீர் குழாயானது வளர்ச்சி அடைந்து கொண்டே தான் இருக்குமாம்.
5. மரபணு காரணமாக சில பெண்களால் பத்து லட்சம் நிறங்களையும் காரணம் திறன் இருக்கும்.
6. கண்களைத் திறந்து தும்முவது சாத்தியமற்றது. வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்.
7. மனிதர்கள் மற்றும் நாய்களால் மட்டுமே கண்களைப் பார்த்து ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளும் தன்மை உண்டு. அதிலும் குறிப்பாக நாய்களால் மனிதர்களின் கண்களை பார்த்து ஒரு விஷயத்தை சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.
8. 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பாதி பேருக்கு கண்கள் நீல நிறமாக தான் இருந்ததாம். ஆனால் தற்போது ஆறில் ஒரு நபருக்கு தான் நீல நிற கண்கள் இருக்கிறதாம்.
9. 10 செகண்டுக்கு ஒரு முறை மனிதன் கண்களை சிமிட்டுகிறான்.
10. மனிதனின் கண்கள் உடலின் பிற உறுப்புகளை காட்டிலும் விரைவிலே குணமாகிவிடும் தன்மையை கொண்டது. (48 மணி நேரத்திற்குள்). ஆனால் சரியான பராமரிப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம்.
11. நம்முடைய மூளையானது நம்மை நோக்கி ஏதேனும் ஆபத்தான பொருள் அதிவேகத்தில் வருவதை கண்டறிந்து அவற்றிடமிருந்து பாதுகாக்க நாம் தானாகவே கண்களை மூடி கொள்கிறோம்.
12. இயற்கையாகவே சிலருக்கு ஒரு கண் ஒரு நிறமும், மற்றொரு கண் வேறு நிறமுமாக இருக்கும். இது ஒரு நோய். அதற்கு ஹீடகோமியா (heterochromia) என்று பெயர்.
13. உடலின் பிற தசைகளை விட கண்களின் தசைகள் தான் எந்நேரமும் சுறுசுறுப்பாக விரைந்து இயங்கும் தன்மையை கொண்டது.
14. நாம் பிறந்த பிறகு அனைத்து உறுப்புக்களும் வளரும். ஆனால் கண்களைத் தவிர. ஏனெனில் கண்கள் நாம் பிறக்கும் போது எந்த அளவில் இருக்கிறதோ, அதுதான் எப்போதுமே இருக்கும்.
15. கண்களால் பல விஷயங்களைப் பார்த்தாலும் உண்மையான பார்வையாளன் மூளை. ஏனெனில் அதுதான் நாம் பார்க்கவற்றை அறிந்து, செயல்படுத்த உதவும்.
16. கண்கள் தான் மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு ஆகும்.
17. கண்களில் இருக்கும் முடியில் (eyelashes) கண்களுக்கு புலப்படாத தீங்கு விளைவிக்காத நுண்ணுயிர்கள் வாழ்கின்றன.
18. புகை பிடித்தல் கண்களை பாதிக்கும். குறிப்பாக இரவு நேரத்தில்.
19. மனிதனின் கண்களானது தீக்கோழியின் மூலிகை விட பெரியதாக இருக்குமாம்.
20. 80 சதவீத கண் நோய்களானது உலக அளவில் தீர்க்கப்படக்கூடியதாகவும், விரைவில் நிவாரணம் பெறக்கூடியதாகவும் உள்ளதாம்.
