முகேஷ் அம்பானியின் மகன், மருமகளுக்கு சொந்தமான விலையுயர்ந்த பொருட்கள் என்னென்ன? ஷாக் ஆகாம படிங்க..

அரண்மனை மாளிகைகள் முதல் ஆடம்பர கார்கள் வரை, அம்பானி குடும்பம் உலகின் மிக விலையுயர்ந்த சில பொருட்களை வைத்திருக்கிறது.

Expensive things owned by mukesh ambani son akash ambani and his wife Shloka

அம்பானி குடும்பம் பல ஆண்டுகளாக வணிகம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தற்போதைய நிர்வாக இயக்குநரும் தலைவருமான முகேஷ் அம்பானி இன்று நாட்டின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார், மேலும் அவரது சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர்கள் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. அரண்மனை மாளிகைகள் முதல் ஆடம்பர கார்கள் வரை, அம்பானி குடும்பம் உலகின் மிக விலையுயர்ந்த சில பொருட்களை வைத்திருக்கிறது.

அந்த வகையில் முகேஷ் அம்பானின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி ஷ்லோகா மேத்தா ஆகியோர் விலையுயர்ந்த கார்கள் ஆடைகள் மற்றும் அணிகலன்களை கொண்டுள்ளனர். ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் திருமனம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்ட மிக ஆடம்பரமான இந்திய திருமணம்" என்ற புதிய முக்கியத்துவத்தைப் பெற்றது. மும்பையில் உள்ள பிகேசியில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் மார்ச் 9, 2019 அன்று ஆகாஷ் அம்பானி - ஷ்லோகா திருமணம் நடந்தது. செல்வாக்கு மிக்க மற்றும் பெரும் பணக்கார குடும்பங்களில் இருந்து வரும் தம்பதிகள் எப்போதும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர்.

ஆகாஷ் தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராக இருக்கும்போது இருவரும் அந்தந்த குடும்ப வணிகங்களில் சேர்ந்துள்ளனர், இதில் டெலிகாம் சேவைகள் மற்றும் ஜியோ சினிமாவும் அடங்கும். மேலும் மில்லியன் கணக்கான நிகர மதிப்புள்ள ஷ்லோகா ரோஸி புளூ டயமண்ட்ஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். இந்த ஜோடி சொந்தமாக வைத்துள்ள சில விலையுயர்ந்த பொருட்கள் குறித்து பார்க்கலாம்.

ஆன்டிலியா குடியிருப்பு

ஆகாஷும் ஷ்லோகாவும் தற்போது ஆன்ட்டிலியா என்ற ஆடம்பர மாளிகையில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். 27 மாடிகள், மூன்று ஹெலிபேடுகள், ஒன்பது லிஃப்ட்கள், 50 இருக்கைகள் கொண்ட திரையரங்கம் மற்றும் 168 கார்கள் தங்கக்கூடிய கேரேஜ் ஆகியவற்றைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வீடு இது. மொட்டை மாடி தோட்டங்கள், நீச்சல் குளங்கள், ஸ்பா மற்றும் சுகாதார மையம், கோவில் மற்றும் அவர்களின் வீட்டில் ஒரு பனி அறை உள்ளது. வீட்டின் விலை 15,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆடம்பரமான கார் சேகரிப்பு

இந்த ஜோடிக்கு சொந்தமான சொகுசு கார்கள் மற்றும் அவற்றின் விலை நிச்சயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஸ்போர்ட்டி வீல்கள் முதல் செடான் வரை பல கார்கள் அவர்களிடம் உள்ளனர்.ரூ. 1.8 கோடி முதல் 4 கோடி விலை கொண்ட ரேஞ்ச் ரோவர் வோக் கார் மற்றும் ரூ. 60-70 லட்சம் மதிப்புள்ள வின்டேஜ் மெர்சிடிஸ் பென்ஸ் காரும் ஆகாஷ் அம்பானி - ஷ்லோகா தம்பதியிடம் உள்ளது.

டிசைனர் பிராண்டுகள்

இந்த ஜோடி பல முறை சிறந்த டிசைனர் பிராண்டுகளில் சிறந்த ஆடைகளை அணிந்திருப்பதைக் காணலாம். அவர்களின் சேகரிப்பில் Gucci, Dior, Louis Vuitton போன்ற உயர் ஃபேஷன் பிராண்டுகள் உள்ளன. ஒரு கலை நிகழ்வில், ஷ்லோகா தனது ஹெர்ம்ஸ் ஆரஞ்சு பாப்பி எவர்கிரெய்ன் லெதர் கான்ஸ்டன்ஸ் பர்ஸை எடுத்துச் செல்லும் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த பையின் விலை ரூ. 6.6 லட்சமாம்.

நீதா அம்பானியின் திருமண பரிசு

450 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் விலைமதிப்பற்ற வைர நெக்லஸையும் ஷ்லோகா மேத்தா வைத்திருக்கிறார். திருமணத்தன்று, ஷ்லோகா இதை தனது மாமியார் நீதா அம்பானியிடம் இருந்து பரிசாகப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“கிட்டத்தட்ட கல்யாணம் ஆயிடுச்சு.. ஆனா..” தனது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ரத்தன் டாடா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios