10, 11, 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டு உள்ளது. அதன் படி மும்மொழி கொள்கை மற்றும் புதிய பாடத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தேர்வு அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள தேர்வு அட்டவணை படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2-ஆம் தேதி தேர்வு தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 24ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் மே மாதம் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போன்று பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள் மே மாதம் நான்காம் தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இப்போதிலிருந்தே தேர்வுக்கு தயாராகலாம்.