கணவன் மனைவி உறவு என்பது காலங்காலமாக உள்ள ஒரு அற்புதமான ஒன்று என்பது  அனைவருக்கும் தெரியும். அந்த உறவில் ஒரு சிறிய விரிசல் ஏற்பட்டாலும், அந்த உறவில் கண்டிப்பாக  ஒரு கசப்பு தெரிய வரும்

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அது போல குடும்ப வாழ்க்கையில், கணவன் சில கேள்விகளை  மனைவியிடம் கேட்கவே  கூடாது. காரணம் எந்த ஒரு மனைவியும் “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்பதை தான் தாரக மந்திரமாக நினைத்து, தன் குடும்ப வாழ்க்கையை  சந்தோஷமாக கழிக்க விரும்புவாள்.

இதற்கிடையில், ஆர்வகோளாறு போன்று, சில கணவன்மார்கள், தன் மனைவியிடம் சில கேள்விகளை   கேட்டு, வாழ்கையின்  சந்தோஷத்தையே இழப்பர். அதுமட்டுல்லாமல் மனைவியையும்  மகிழ்ச்சியாக வைத்திருக்க மாட்டார்கள், இதனால் தாங்கள்  பெற்றுக்கொள்ளும் குழந்தையின் எதிர்காலமும் பெரும்  கேள்விக்குள்ளாகி விடும் என்பதை நம்மில் பலரும் உணருவதில்லை என்பது தான் உண்மை

குடும்பத்தையே சீரழிக்கும் அந்த கேள்வி எது தெரியுமா ?

திருமணமான தம்பதிகள்  ஒருவரையொருவர்  புரிந்துக்கொள்வதற்காக, மனம் விட்டு பேச வேண்டும் தான். அதற்காக தேவையில்லாமல் இல்லாத ஒன்றை கற்பனையாக வைத்துக்கொண்டு, மனைவியை  சீண்டுவர். அதாவது, இதற்கு முன் உங்களுக்கு காதல் அனுபவம் உண்டா? எந்த மாதிரி பழகினீர்கள் ? எங்கெல்லாம் சென்று உள்ளீர்கள் ? என பட்டியல் நீளும்.

ஒருவேளை அந்த பெண் யாரையாவது காதலித்து இருந்தால்,ஆர்வ கோளாறில் எதையோ உளறி தள்ள, அவ்வளவு தான்... அந்த ஒரு பாயின்ட் வைத்துக்கொண்டு, தன் மனைவியை அவள் சாகும் வரை  சொல்லி காண்பித்தே உயிருடன் சாகடிப்பதே  தன் வாழ்கையில் வழக்கமாக கொண்டுள்ளனர் சிலர்.

தன் வாழ்க்கையையே தொலைந்து போக வைக்கும் இந்த கேள்வி நமக்கு தேவைதானா என  தேவைப்படுபவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு :தன் மனைவியை தவிர  வேற எந்த  பெண்ணையும்  மனதில்  கூட  நினைத்து  பார்த்ததில்லை என   கூறும் ஆண்மகன்கள், ஒரு  முறை  கண்ணாடியில் தன் முகத்தை   நன்கு பார்த்துவிட்டு  மனையிடம் கேள்விகளை கேட்கலாம் .