Asianet News TamilAsianet News Tamil

இங்கிலீஸ் பேசி அசத்தும் தாதி..!! IPS அதிகாரி வெளியிட்ட வைரல் வீடியோ...!!

ஐ.பி.எஸ்.அதிகாரியான அருண் போத்ரா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில்..,"ராஜஸ்தான், ஜூன்ஜூனு பகுதியைச் சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி அசத்தலாக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பல லட்சம் லைக்-க்குகளை குவித்து வருகிறது. 

English Speaking Nanny !! Viral Video released by IPS officer .. !!
Author
Rajasthan, First Published Mar 3, 2020, 11:03 PM IST

T.Balamurukan
ஐ.பி.எஸ்.அதிகாரியான அருண் போத்ரா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில்..,"ராஜஸ்தான், ஜூன்ஜூனு பகுதியைச் சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி அசத்தலாக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பல லட்சம் லைக்-க்குகளை குவித்து வருகிறது. 

English Speaking Nanny !! Viral Video released by IPS officer .. !!

ராஜஸ்தான் மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் பெரும்பாலானோர் கல்வியறிவு இல்லாதவர்கள். ராஜஸ்தான், ஜூன்ஜூனு பகுதியைச் சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அனைவரையும் அசத்தி வருகிறார்.  அவர் ஆங்கிலம் பேசும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த நிலையில், 

மூதாட்டியிடம் மகாத்மாகாந்தி பற்றிக் கேட்கிறார்கள், முதாட்டியோ," காந்தி உலகின் மிகச் சிறந்த தலைவர்.மிகவும் எளிமையானவர். அஹிம்சையை வலியுறுத்தியவர், தேசப்பிதாவான காந்தி இந்து இஸ்லாமியர்களை மிகவும் நேசித்தவர் என ஆங்கிலத்தில் பேசி அசத்தி வருகிறார். மூதாட்டியின் ஆங்கில திறமையைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

English Speaking Nanny !! Viral Video released by IPS officer .. !!
இந்த வீடியோவை, ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் போத்ரா  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு,ஆங்கிலம் பேசும் மூதாட்டிக்கு 10-க்கு எத்தனை மதிப்பெண் கொடுக்கலாம் என்று கேட்டிருந்தார். மூதாட்டிக்கு 10க்கு 100 மதிப்பெண்களை கொடுக்கலாம் என்று அவரவர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ வெளியான ஒரே நாளில், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் விடியோவை பார்த்தும் பகிர்ந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாராட்டிப் லைக் பதிவிட்டுள்ளார்கள். பக்வானி தேவியை "ஆங்கிலம் பேசும் "தாதி" (பாட்டி)என்று பாசத்தோடு அழைத்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios