உங்கள் வீட்டு சீலிங் ஃபேன் மெதுவாக சுத்துகிறது என்றால் ஜெட் வேகத்தில் சீறிப்பாய என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடை கொளுத்தும் வெயிலில் நம்ம இதமாக்க எல்லார் வீட்டிலேயும் ஏசி இருக்கிறதோ இல்லையோ, ஆனால் சீலிங் ஃபேன் கண்டிப்பாக இருக்கும். இது நம்முடைய உடலை வெயிலின் தாக்கத்திலிருந்து ஓரளவுக்காவது குளிர்ச்சிப்படுத்தும். இருப்பினும், சீலிங் பேனை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அது மெதுவாக சுத்தும். மேலும் காற்று வராது. நீங்கள் அதை வேகமாக சுழல வைக்க இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் முயற்சி செய்து பாருங்கள். மெதுவாக உங்கள் சீலிங் ஃபேன் ஜெட் வேகத்தில் பறக்கும்.
சீலிங் ஃபேன் வேகமாக சுத்த சிம்பிள் டிப்ஸ்:
1. சுத்தம் செய் - சீலிங் ஃபேன் வேகமாக சுத்த முதலில் அதை சுத்தம் செய்யுங்கள். சீலிங் ஃபேனில் படிந்திருக்கும் தூசியை துடைத்தாலே போதும் ஓரளவுக்கு ஃபேன் நன்றாக சுற்ற ஆரம்பிக்கும். எனவே சீலிங் பேனை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.
2. மின் இணைப்பை துண்டிக்கவும் - நீங்கள் சீலிங் பேனை சுத்தம் செய்வதற்கு முன்பாக மின் இணைப்பை அணைக்க மறக்காதீர்கள். ஒரு துணியைக் கொண்டு சீலிங் ஃபேன் இறக்கை மற்றும் மோட்டாரை சுத்தம் செய்யுங்கள். இதனால் அதன் இயக்கம் சற்று அதிகரிக்கும்.
3. கெபாசிட்டரை மாற்று - சீலிங் ஃபேன் மெதுவாக சுழலுகிறது என்றால் முதலில் சரி பார்க்க வேண்டியது அதனுடைய கெபாசிட்டரை தான். ஏனெனில் இதுதான் ஃபேனின் வேகத்தை நிர்ணயிக்கும் கருவி. கெப்பாசிட்டர் மாற்றினால் ஃபேன் வேகமாக சுழல ஆரம்பித்து விடும். ஆகவே உங்களது சீலிங் ஃபேன் மெதுவாக சுற்றுகிறது என்றால் முதலில் அதன் கெபாசிட்டர் நன்றாக இருக்கிறதா என்று சரி பார்த்து மாற்றுங்கள்.
4. ஆயில் போடலாம் - சீலிங் ஃபேன் மோட்டாரில் பொருத்தப்பட்டிருக்கும் பியரிங்கில் அழுக்கு மற்றும் தூசிகள் குவிந்துவிடும். இதனால் ஃபேன் மெதுவாக சுத்தும். ஆகவே அதை சரி பார்த்து பியரிங்கில் ஆயில் போடவும். ஒருவேளை பியரின் முழுவதுமாக பழுதாகி விட்டால், கடையில் கொடுத்து புதிதாக மாற்றவும்.
5. ஃபேனை சரியான இடத்தில் வை - சீலிங் ஃபேன் நன்றாக சுத்த வேண்டுமானால் அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்தது தான். ஆகவே காற்றோட்டத்தை அதிகப்படுத்தும் இடத்தில் பேன் இருக்கிறதா என்பதை முதலில் சரி பார்க்கவும். அதுவும் குறிப்பாக வெளியில் இருந்து குளிர்ந்த காற்றை இழுப்பதற்கு ஏதுவாக ஜன்னலுக்கு நெருக்கமான இடத்தில் வைக்க வேண்டும்.
மேலே சொன்ன விஷயங்களை நீங்கள் முயற்சி செய்து பார்த்தும், சீலிங் ஃபேன் மெதுவாக தான் சுற்றுகிறது என்றால் புதிய ஃபேன் வாங்குவதுதான் நல்லது. தற்போது பலவிதமான அம்சங்களில் சீலிங் ஃபேன்கள் சந்தையில் விற்பனைகின்றன. எனவே உங்களது தேவைக்கும், பட்ஜெட்டுக்கும் ஏற்றபடி ஒன்றை வாங்குங்கள்.
