ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் அடிக்கடி பயனப்டுத்தும் கோதுமை மாவு, உண்மையாகவே நமக்க ஆரோக்கியத்தை தான் தருகிறதா? அது சுத்தமான கோதுமை மாவு தானா அல்லது கலப்படமான மாவா என்பதை வீட்டிலேயே எளிய முறையில் கண்டுபிடித்து விடலாம். கோதுமை மாவு கலப்படத்தை எப்படி வீட்டில் கண்டுபிடிக்க முடியும் என யோசிக்கிறீங்களா? வாங்க தெரிந்து கொள்ளலாம். 

அரிசிக்கு மாற்றாக கோதுமையை பலரும் உணவில் பயன்படுத்தி வருகிறார்கள். வீட்டில் நாம் பயன்படுத்தப்படும் கோதுமை மாவு சுத்தமானது தானா என யோசித்து பார்த்தது உண்டா? சில நேரங்களில், கோதுமை மாவில் கலப்படம் சேர்க்கப்பட்டிருக்கலாம். இது உடல்நல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். கோதுமை மாவின் தூய்மையை தெரிந்து கொள்ள பாக்கெட்டில் போடப்பட்டிருக்கும் Ingredients ஐ பார்க்காதீங்க. வீட்டிலேயே இந்த எளிமையான முறைகளை பின்பற்றி பாருங்க. 

கோதுமை மாவில் ஏற்படும் கலப்படங்கள் :

* மைதா மற்றும் அரிசி மாவு – கோதுமை மாவின் நிறத்தை மாற்றும்.
* சிலிகான் மற்றும் கரிம பாகங்கள் – மாவின் மணம்,தன்மையை மாற்றும்.
* ஸ்டார்ச் மற்றும் சுவையூட்டிகள் – உணவின் தன்மையை பாதிக்கும்.

கோதுமை மாவு கலப்படத்தை கண்டறிய வழிகள் : 

1. நீர் சோதனை – மைதா கலப்பை கண்டுபிடிக்க :

* ஒரு கண்ணாடி கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் கோதுமை மாவை சேர்க்கவும்.
* சில நிமிடங்கள் கழித்து நீரின் மேல்பகுதியில் மைதா மற்றும் அரிசி மாவு மிதந்து விடும்.
* தூய கோதுமை மாவு நீரில் முழுவதுமாக கரைந்து, குழம்பாக மாறும்.

2. சிதறல் சோதனை (Rubbing Test) :

* சிறிது கோதுமை மாவை இரண்டு விரல்களுக்குள் வைத்து நன்கு தேய்த்து பார்க்கவும்.
* தூய கோதுமை மாவு மென்மையாக இருக்கும்.
* மாறாக, மைதா அல்லது சிலிகான் கலந்திருந்தால் கொரகொரப்பாக உணரப்படும்.
* கலப்பு இருந்தால் கடினமாக இருக்கும்.

3. லேசான தீ சோதனை (Flame Test) – செயற்கைப் பொருட்களை கண்டுபிடிக்க : 

* சிறிது கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து தீ வைத்துப் பாருங்கள்.
* தூய கோதுமை மாவு என்றால் மெதுவாக எரிந்து கருகும். ஆனால் கலப்படமாக இருந்தால் எரிந்து போகாது அல்லது வெளிப்புறம் கருப்பு படலம் படியும்.
* சிலிகான் அல்லது கிரிட் பவுடர் கலந்திருந்தால், பொடியாகி கொழுந்து விடும்.

4. ஐயோடின் சோதனை (Iodine Test) – ஸ்டார்ச் இருப்பதை கண்டுபிடிக்க :

* சிறு அளவு கோதுமை மாவை தண்ணீரில் கரைத்து, அதில் ஒரு சொட்டு அயோடின் திரவம் (Iodine Solution) விடவும்.
* தூய கோதுமை மாவில் எந்த மாற்றமும் ஏற்படாது.
* ஸ்டார்ச் அதிகம் கலந்திருந்தால், நீலம் அல்லது கருப்பு நிறமாக மாறும்.
* நிறமாற்றமின்றி இருந்தால் அது தூய்மையான கோதுமை மாவு.

5. மணம் சோதனை (Smell Test) – செயற்கை ரசாயனங்களை கண்டுபிடிக்க :

* கோதுமை மாவை உங்கள் கைகளால் நன்றாக நெறித்து மணம் பார்க்கவும்.
* தூய கோதுமை மாவில் இயற்கையான மணம் இருக்கும்.
* கலப்பு இருப்பின், நுண்ணிய ரசாயன மணம் அல்லது கசப்பு வாசனை வரலாம்.

கலப்படத்தை தடுக்கும் வழிகள் :

* உயர்தரமான நம்பகமான பிராண்டுகளை தேர்வு செய்யவும்.
* பசுமையான நிறமும் இயல்பான வாசனையும் உள்ளதா என உறுதிசெய்யவும்.
* கோதுமை மாவை ஈரப்பதமில்லாமல், வறட்சியான இடத்தில் சேமிக்கவும்.
* நல்ல முறையில் மாவை தின்று பார்க்கவும் – செயற்கை கலப்புகளை கண்டுபிடிக்க இது உதவும்.