Asianet News TamilAsianet News Tamil

வெந்நீரில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து காலையில் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

Ghee With Warm Water Benefits : தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து அருந்துவதால் சருமம் முதல் உள்ளுறுப்புகள் வரை பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். 

drinking hot water with ghee in the morning can have many health benefits in tamil mks
Author
First Published Aug 20, 2024, 7:30 AM IST | Last Updated Aug 20, 2024, 7:30 AM IST

ஆதிகால ஆயுர்வேத நூல்கள் தொடங்கி இன்றைய மருத்துவ நிபுணர்கள் வரை ஆரோக்கியமாக இருக்க நெய் உண்ண அறிவுறுத்துகின்றனர். நெய் அவ்வளவு நல்லது. சூடான சோறில் நெய்யை மிதக்கவிட்டு நன்கு பிசைந்து ஒரு வாய் சாப்பிட்டால்.. அடஅட! அது அமிர்தம். நெய் சுவையை கூட்டுவதோடு மனிதனின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

நெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கியுள்ளன.  ஆனால் குறிப்பிட்ட அளவை எடுத்துக் கொண்டால் மட்டுமே அதன் நன்மைகளை பெற முடியும். ஆயுர்வேத கூற்றின்படி, வாத மற்றும் பித்த பிரச்சனைகளை தவிர்க்க நெய் அவசியம். நெய்யை உணவுடன் எடுத்து கொள்வதை விடவும், வெந்நீருடன் எடுத்து கொள்வதால் நிறைய பலன்களை பெறலாம். இதனை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். 

எடை அதிகமாகிவிடுமா? 

நெய் உண்பதால் உடல் எடை அதிகமாகும் என்றாலும், குறைவாக உண்ணும்போது உடலுக்கு நன்மைதான் செய்கிறது. வெந்நீருடன் நெய் கலந்து குடிப்பது உங்களுடைய வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும். 

மலச்சிக்கலுக்கு குட் பை! 

வெந்நீரில் நெய் கலந்து எடுத்து கொள்வதால் வளர்சிதை மாற்றம் மேம்படும்.   உங்களுடைய ஆற்றல் அதிகரிக்கும். இதயம், மூளை ஆகியவற்றின்  ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெந்நீரில் நெய் கலந்து அருந்துவதால் குடல் சீராக இயங்கும்.  நெய்யில் உள்ள கொழுப்பு அமிலமான பியூட்ரிக் அமிலம் வயிற்றில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதனால் செரிமானம் மேம்படும். இவ்வாறாக மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது. 

மூளையின் டானிக்: 

பசு நெய்யை ஆயுர்வேதம்  'மேத்ய ரசாயனம்' என்கிறது. இது சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் மன ஆரோக்கியம், நினைவாற்றலை மேம்படுத்தும். கிட்டத்தட்ட மூளைக்கு டானிக் போல செயல்படும். மூளையையும், நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது. நெய்யை வெந்நீரில் கலந்து அருந்துவதால் நரம்பு மண்டலத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். கவலை உள்ளிட்ட மூளையை பாதிக்கும் மற்ற  கோளாறுகளைப் போக்க உதவுகிறது.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்க.. "இந்த" பிரச்சினை எல்லாம் பறந்து போகும்!

வைட்டமின் சுரங்கம்: 

பசு நெய் உண்பதால் உடலில்  நல்ல கொலஸ்ட்ரால் அளவு மேம்படும். வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே ஆகிய கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்ச தேவையான நல்ல கொழுப்புகளை நெய் நம் உடலில் பராமரிக்கிறது. கெட்ட கொழுப்பை குறைக்க நெய் உதவுகிறது. அதிக கொலஸ்ட்ரால் இதய நோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அளவோடு நெய்யை உணவில் சேர்த்து உண்பதால்  இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

சருமத்தை காக்கும்: 

நெய் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும். சருமத்தில் பளபளப்பை கொடுக்கிறது.  நெய்யில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. சரும வறட்சி நீங்க நெய் கலந்த வெந்நீரை தொடர்ந்து அருந்தலாம். 

இதையும் படிங்க:  நீங்கள் வாங்கும் நெய் போலியானதா? உண்மையானதா..? கண்டுபிடிக்க ஒரு நிமிஷம் போதும்! எப்படி தெரியுமா?

செய்முறை: 

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இந்த பானத்தை தயார் செய்து குடித்து பாருங்கள். உடலில் எண்ணற்ற அதிசயங்கள் நடக்கும். அதற்கு முதலில் 200 மி.லி சூடான நீரை எடுத்து அதில் 1 ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேருங்கள். இதனை நன்கு கலக்கிய பின் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். வீட்டில் தரமான நெய் தயாரிக்க, வெண்ணெயை 100 டிகிரி செல்சியஸில் சூடாக்கினால் போதும். எளிமையான முறையில் நெய் வீட்டிலே தயார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios