காபி குடிப்பதால் உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுவதாக தான் ஆய்வுகள் கூறி வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட சமயங்களில் காபி குடித்தால் மட்டும் தான் நன்மை தரும். சாப்பிட்ட பிறகு காபி குடித்தால் அது பலவிதமான ஆபத்துக்களையும், உடலில் பல விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். 

காபி பலரது ஃபேனரைட் பானமாகும். காலை, மாலை இரு வேளையும் காபி குடிக்கவில்லை என்றால் வேலையே செய்ய முடியவில்லை என சிலர் சொல்லுவதை கேட்டிருப்போம். இன்னும் சிலர் எத்தனை முறை காபி கொடுத்தாலும் குடித்து விடுவார்கள். அந்த அளவிற்கு காபி மீது தீராத காதல் கொண்டிருப்பார்கள். பலருக்கும் சாப்பிட்டு முடித்ததும் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. குறிப்பாக ஓட்டலுக்கு சென்றால் சாப்பிட்டு முடித்த பிறகு காபி ஆர்டர் செய்து குடிப்பவர்களை, தூங்குவதற்கு முன் காபி குடிப்பவர்களை பார்த்திருப்போம்.

உணவு சாப்பிட்டு முடித்ததும் இப்படி காபி குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? உணவுக்கு பிறகு காபி குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள், ஏற்படும்? எதற்காக சாப்பிட்ட பிறகு காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்? வாங்க பதில் தெரிந்து கொள்ளலாம்.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு காபி குடிப்பது நல்லது என்று தான் டாக்டர்கள் சொல்கிறார்கள். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் காபி நல்லது தான். அதே சமயம் அதிகமாக காபி குடிப்பதால் நெஞ்சு எரிச்சல், வயிற்று பிரச்சனைகள் போன்றவை ஏற்பட்டு விடும்.சிலருக்கு சாப்பிடதுமே காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் உங்களுக்கு இருக்கிறது என்றால் அதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

காபி குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் :

* சாப்பிட உடனேயே காபி குடிப்பதால் உணவில் இருக்கும் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவது தடுக்கப்படும். இதனால் செரிமான பிரச்சனைகளும் ஏற்பட்டு விடும். காபியில் பாலிபினால்கள், டானின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவைகள் உடலில் இரும்புச்சத்துக்கள் உறிஞ்சுதை குறைத்து விடும். நீங்கள் உணவில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டிருந்தால் அது உங்களின் செரிமானத்தை பாதித்து விடும்.

* உணவு சாப்பிட்ட கையோடு காபி குடிப்பது மன அழுத்தத்தை குறைந்து, ரிலாக்சாக உணர செய்யலாம். ஆனால் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும். இதன் காரணமாக சில நேரங்களில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படலாம். இது உங்களை எரிச்சல் உணர்வு, மத அழுத்தம், பதற்றத்தை ஏற்படுத்தி விடும். 

இரவில் காபி குடிக்கும் பழக்கம் உண்டா?

* சாப்பிட்ட பிறகோ அல்லது இரவில் தூங்குவதற்கு முன்போ காபி குடித்தால், அது உங்களின் பற்களில் துவாரங்களை ஏற்பட செய்து விடும். இதனால் பல் கூச்சம், பற்களில் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

* சாப்பிட்ட உடனேயே காபி குடிப்பதால் இரைப்பை அமிலத்தை அது அதிகரிக்க செய்து விடும். இதனால் சில சமயங்களில் வயிற்றுப் போக்கு, அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைக்ளை ஏற்படுத்தி விடும். ஒருவேளை சாப்பிட்டதும் காபி குடிக்கும் பழக்கம் நீண்ட காலமாக உங்களுக்கு இருந்தால் மலம் கழிப்பதிலும் சிரமத்தை ஏற்படுத்தி விடும். 

* இரவில் தூங்குவதற்கு முன்போ அல்லது சாப்பிட்ட பிறகோ காபி குடித்தால் உங்களுக்கு தூக்கத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. காபியில் உள்ள காஃபின் சில சமயங்களில் மூளைகளுக்கு செல்லும் சிக்னல்களை தடுத்து விடும். இது தூக்கமின்மை, தூக்க சுழற்சியில் சிக்கல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தி விடும்.