இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போனின் பயன்பாடு  அதிகரித்து உள்ளது  அதுவும் கூட நம் வாழ்கையையே மொபைல் போன் உடன் தான்  பயணிக்கிறோம் என்றே கூறலாம். அதுவும் கூட நடக்கும் போது போன், வண்டி ஓட்டும் போது போன்,  ட்ராவல் பண்ணும் போது என  எங்கு பார்த்தாலும் போன், எதிலும் போன் என்ற  நிலை உருவாகி உள்ளது .

அவ்வாறு அதிக நேரம் நாம் மொபைல் போனை  பயன்படுத்தினால், என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்

உதாரணத்திற்கு, சீனாவை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பிரச்சனை  உலக அளவில்  அனைவரிடத்திலும்   ஒரு விழிப்புணர்வை  ஏற்படுத்தி உள்ளது.

இந்த  பெண்  அதிக நேரம் தன் தலை குனிந்தபடியே மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராம்.  இதனால் அவளுடைய கழுத்து பகுதியில் அதிக  சேதம் ஏற்பட்டு, தலை நிமிர  கூட முடியாத அளவிற்கு  வலியால்  பாதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர்  தற்போது  மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் இந்த பெண்மணி, இன்னமும் பழைய நிலைக்கு திரும்ப  முடியாமல் அவதிப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

எனவே எந்த நேரத்தில் எதை.,  எப்படி, எவ்வளவுநேரம்  பயன்படுத்த வேண்டுமோ அதற்கேற்றார் போல் பயன்படுத்துவதே  நல்லது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் .