கொரோனா எதிரொலி..! பிரதமர் மோடி அவரச ஆலோசனை ..! மக்களே அச்சப்பட வேண்டாம்..! 

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதால்  உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஒரு நிலையில் சீனாவில் மட்டும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒரு நிலையில் பல்வேறு நாடுகளிலும் அதன் பாதிப்பு எட்டிப்பார்க்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் தற்போது இந்தியாவிலும் இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் இத்தாலி சென்று டெல்லி திரும்பிய ஒருவருக்கும், துபாய் சென்று தெலுங்கானா திரும்பிய ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து வேகமாக மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க இந்திய அரசு பல்வேறு கட்ட அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார் பிரதமர் மோடி. இது குறித்து பிரதமர் தெரிவிக்கும்போது "பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகை புரியும் பயணிகளை அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் மத்திய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு வருகிறது. எனவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்" என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.