காரில் ஏறியதும் AC போடாதீர்கள் ஏன்?

காருக்குள் ஏறிய உடன் ஏசியை பயன்படுத்தும் நபரா நீங்கள்..? இது உங்களுக்கான  பதிவு...

நாம் எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால், அதுவும் காரில் செல்லும் போது,காரில் ஏறிய உடனே ஏசி ஆன் செய்து விடுவோம் அல்லவா..? ஆனால் நாம்  அவ்வாறு செய்ய கூடாது.

A \C காரை பயன்படுத்தும் போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது.காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்க வேண்டும்.

ஏன்  உடனே A \C ஆன் செய்ய கூடாது தெரியுமா..?

காருக்குள் உள்ள DASHBOARD, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம். மட்டுமே ஆனால் வீடுகளில் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும்.

இதே போன்று  வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரை இருக்கும். இது மோசமான கெடுதலை விளைவிக்கும்.

விளைவுகள் :

இதன் காரணமாக கேன்சர், லுக்கூமியா, சிறு நீரக பாதிப்பு போன்ற பல பதிப்புகள் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.எனவே காரை எடுக்கும் முன் சிறிது நேரம், காரின்  கதவுகள் திறந்து வைக்கப்பட்டு பின்னர் பயன்படுத்துவது நல்லது.