கொரோனா பயம் வேண்டாம்..! ஆனால் யாரெல்லாம் மிக கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா..?

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, 129 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் யாரை மிக எளிதாக தாக்க வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்

70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், அவர்களது நோய் எதிர்ப்பு தன்மை, மற்றும்  உடல் நிலையை பொறுத்தது 

ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள், இதய செயலிழப்பு போன்ற நீண்டகால இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட கல்லீரல் நோய் ( நோய் எதிர்ப்பு தன்மை  குறைவாக இருப்பவர்கள்)

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் அல்லது ஸ்டீராய்டு மாத்திரைகள் அல்லது கீமோதெரபி போன்ற மருந்துகளின் விளைவாக பலவீனமாக இருப்பவர்கள் 

அதிக எடையுடன் இருப்பது, கர்ப்பமாக இருப்பவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான சிறுநீரக நோய் (டயாலிசிஸ்) செய்துகொள்பவர்கள் 

எனவே மேற்குறிப்பிட்டவர்கள் அவராகவே தங்களை மிக தூய்மையாகவும், மற்றவர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பதே மிகவும் நல்லது. மேலும் வெளியில் எங்கும் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கூட்டம் இருக்கும் இடத்தில் கட்டாயம் செல்ல வேண்டாம்.