தமிழ் புத்தாண்டான நாளை அனைவருக்குமே மிகவும் முக்கியமான நாள்....  

செல்வ வசிய பூஜை நாளை செய்ய வேண்டும் தமிழ் புத்தாண்டு என்பது மிகவும்  நன்னாள்.

புத்தாண்டான நாளைய தினம்,அதாவது சனிக்கிழமை வருகின்றது.இந்த தமிழ் புத்தாண்டில்  தமிழகத்தில் மழை பெய்யுமாம்.

தமிழ் புத்தாண்டில் நாம் செய்ய வேண்டிய சிறு பூஜை  

புத்தாண்டு முதல் நாளில், விஷுக்கனி  அதாவது கண்களால் பழங்களை பார்ப்பது...

புத்தாண்டில் காலை நேரத்திலேயே கண் குளிர பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும்

நாளை காலை வேளையிலேயே,எழுந்தவுடன் கண்நிறைய  வகை வகையான பழங்கள பார்க்க  வேண்டும்

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்..?

இன்று மாலை வேளையிலேயே, தேவையான பழங்களை வாங்கி நம் வீட்டில் வைத்துவிட விடவேடும்.

தாம்பூல தட்டில் வைக்க வேண்டிவை..:

பூ பழங்கள்,

முக்கனிகள்.. மா பலா வாழை (கண்டிப்பாக இருக்க வேண்டும்)

வெற்றிலை பாக்கு

அரிசி பருப்பு,

தங்கம், வெள்ளி நாணயம்,

வெள்ளரிப்பழம்

தென்னம்பூ கொத்து

மஞ்சள் நிற செவ்வந்தி

தண்ணீரில் பச்சை கற்பூரம் மற்றும் கல் உப்பை  கரைத்து  வீடு முழுக்க இன்று இரவே தெளித்து விட வேண்டும்

சாம்பிராணி போட வேண்டும்...

7 கூட்டுத் தொகையிலான பணம்..!

ரூ.1006,ரூ.10006,ரூ.25,காயின்ஸ் எடுத்து வையுங்கள்...

பின்,கடந்த ஆண்டு எங்களுக்கு நலமாகவும் வளமாகவும் இருந்தது என மனதார நன்றி கூறி,வரும் ஆண்டு நல்ல முறையில் அமைய வேண்டும்,சகல ஐஸ்வர்யமும்  கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு உறங்க போகலாம்.அதாவது இன்று இரவே செய்துவிடவேண்டும்.

காலை எழுந்தவுடன் ,இரவு படுக்கும் முன், தாம்பூலதட்டில் வைக்கப்பட்ட அந்த பழங்களை கண்களாளல் காண வேண்டும்....

பின்னர் வீட்டின் மற்ற உறுப்பினர்களையும் அழைத்து, அவர்களையும் அந்த  பழத்தை பார்க்க சொல்ல வேண்டும்

சூரிய  தரிசனம்

பின்னர் சூரியனை பார்த்து வழிபட்டு,அதாவது இரு கைகளை கூப்பி சூரியனை பார்த்து வணங்கி விட்டு, குளிக்க சென்றுவிட வேண்டும்.

மீண்டும் சூரிய வழிபாடு

குளித்து முடித்துவிட்டு மீண்டும் சூரிய வழிபாடு செய்ய  வேண்டும்.

பின்னர் குல தெய்வம்,கணபதி தெய்வம், மகா  லக்ஷ்மி  தெய்வத்தையும், சிவா பெருமானையும் வணங்க வேண்டும்

காலை  7 மணிக்குள்

நாளை காலை,காலை 7 மணிக்குள் இதனை செய்துவிட்டால், கூடுதலான பலன்கள் கிடைக்கும்.

கண்ணாடி

இதே போன்று, இரவு நேரத்தில் தாம்பூலத்தில் வைக்கப் பட்ட,பழங்கள் மற்றும் பணம் இவை இரண்டுமே  கண்ணாடியில் தெரியும் அளவிற்கு,அதன் அருகிலேயே வைத்துவிட்டு,காலை எழுந்த வுடன் பழங்களை பார்க்க வேண்டும், கண்ணாடியில் தெரியும் பணம் மற்றும் பழங்கள் பார்க்க வேண்டும்..

இவ்வாறு செய்வதால்,சகல ஐஸ்வர்யமும கிடைக்குமாம்.தமிழ் புத்தாண்டிற்கு மறக்காமல் இதை செய்து வழிபட்டுபாருங்கள்,வாழ்வில் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்.