சப்பாத்தியும், சாதமும் ஒன்றாக சேர்த்து சாப்பிடவே கூடாதாம்... மீறினால் என்ன ஆகும் தெரியுமா..?
Rice And Chapati Side Effects : சப்பாத்தி மற்றும் சாதம் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்கின்ற நிபுணர்கள். அப்படி மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உணவு என்பது நம் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய அங்கமாக வகிக்கிறது. நம் உடலை சுறுசுறுப்பாகும் ஆரோக்கியமாகவும் வைக்க சத்தான உணவு சாப்பிடுவது மிகவும் முக்கியம். இல்லையெனில், பல வகையான நோய்கள் நம்முடைய உடலை நேரடியாக தாக்கும். மேலும், நம்முடைய நாட்டில் பலவகையான உணவு வகைகள் உள்ளன. குறிப்பாக நம்முடைய இந்திய உணவில் சப்பாத்தி மற்றும் சாதம் இவை இரண்டிற்கும் தனி சிறப்பு உண்டு.
சிலர் சப்பாத்தி மட்டும் விரும்பி சாப்பிடுவார். சிலர் சாதத்தை மட்டும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் சிலரோ இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடு விரும்புகிறார்கள். மேலும் இது உடலுக்கு நிறைய சத்துக்களை கொடுக்கும் என்றும் நம்புகிறார்கள். ஆனால், இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடவே கூடாது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அப்படி மீறி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்கின்ற நிபுணர்கள்.
இதையும் படிங்க: நீங்களும் சப்பாத்தி மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் வைப்பீங்களா? ஜாக்கிரதையாக இருங்கள்..!!
உண்மையில், இவை இரண்டிலும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, சப்பாத்தி மற்றும் அரிசியை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இந்த கட்டுரையில் சப்பாத்தி மற்றும் சாதம் ஒன்றாக சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Kitchen Tips : ஃப்ரிட்ஜில் வைத்த சப்பாத்தி மாவு கருப்பாக மாறாமல் இருக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
சப்பாத்தி மற்றும் சாதம் ஒன்றாக சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்:
சர்க்கரை அளவில் மாற்றம்: சப்பாத்தி மற்றும் சாதம் ஒன்றாக சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். இதனால், இது வகை 2 நீரிழிவு நோயின் அபாயம் அதிகரிக்கும். மேலும், சாதம் மற்றும் சப்பாத்தி ஒன்றாக சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானதாக கருதப்படுகிறது.
அஜீரணம்: நிபுணர்களின் கூற்றுப்படி, சப்பாத்தி மற்றும் சாதம் ஒன்றாக சாப்பிட்டால் குடலில் நொதித்தல் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இது கிளைசெமிக் குறியீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அஜீரண பிரச்சனை ஏற்படும்.
கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்: சப்பாத்தி மற்றும் சாதம் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் உடலில் மாவுச்சத்து உறிஞ்சும் தன்மை அதிகரிக்க செய்யும். இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.
செரிமான பிரச்சனை: சப்பாத்தி மற்றும் சாதம் அவை இரண்டும் கார்போஹைட்ரேட்டின் நல்ல ஆதாரமாகும். எனவே, இவற்றை ஒன்றாக சாப்பிட்டால் செரிமான அமைப்பில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இது வாயு, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சப்பாத்தி சாதம் சாப்பிட சரியான நேரம்?:
நிபுணர்களின் கூற்றுப்படி, இவை இரண்டையும் குறைந்தது 2 மணி நேர இடைவெளியில் சாப்பிடலாம். மேலும் நீங்கள் ஒரு நேரத்தில் ஏதாவது ஒன்றை மட்டும் தான் சாப்பிட வேண்டும். அதாவது நீங்கள் சாதம் சாப்பிடுகிறீர்கள் என்றால் சாதம் மட்டும் சாப்பிடுங்கள்அல்லது சப்பாத்தி சாப்பிடுகிறீர்கள் என்றால் சப்பாத்தி மட்டும் சாப்பிடுங்கள். இப்படி செய்வதன் மூலம் இரண்டு தானியங்களில் இருந்தும் முழுச்சத்தும் உங்கள் உடலுக்கு கிடைக்கும். இதனால் அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D