Asianet News TamilAsianet News Tamil

தயவு செய்து பழம் சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீர்கள்..!

dont do this when taking the fruits
dont do this when taking the fruits
Author
First Published Sep 22, 2017, 3:43 PM IST


பழங்கள்  சாப்பிட்டால்  நமது  உடலுக்கு  நல்லது. அதாவது மற்ற உணவு  முறைகளை   நாம்  பொதுவாக  உண்டு  வந்தாலும்,   நம் உடல்  நலமுடன்  இருக்க, நமக்கு தேவையான  அனைத்து சத்துக்களையும் பழத்தின் மூலமாக  பெற  முடியும் 
அவ்வாறு  சாப்பிடும் பழத்தை, நாம் எப்படி சாப்பிட வேண்டும், எதனுடன்  சேர்த்து சாப்பிட கூடாது என்பதை  பார்க்கலாம் 

ஆரஞ்சு மற்றும் கேரட்

இந்த காம்பினேஷன் பல நேச்சுரல் ஜூஸ் கடைகளில் கிடைக்கிறது. இதனை  அதிகம் விரும்பி வாங்கி பருகும் நம் மக்கள் இதனால் ஏற்படும் விளைவுகளை சற்று  ஆராய்ந்து  பார்க்க வேண்டும் 
இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால், அதிகமான அமிலச் சுரப்பு, நெஞ்செரிச்சலுடன், சிறுநீரக மும் பாதிக்கப்பட்டும்

அன்னாசிப்பழம் மற்றும் பால்

அன்னாசி  பழத்தில் புரோமிலைன் உள்ளதால்,இதனை  பாலுடனோ அல்லது தயிருடன் கலந்து சாப்பிட்டால், உடல் முழுவதும் தேவையில்லாத  நச்சுக்கள்  அதிகமாகும்.

மற்ற பிரச்னை கள்?

குமட்டல்,வாயு தொல்லை, தலைவலி, வயிற்று வலி மற்றும் சில நேரங்களில் வயிற்றுப் போக்கு கூட  ஏற்படும் என்பது குறிபிடத்தக்கது. இதனை  குறிப்பாக  குழந்தைகளுக்கு  கொடுக்க  வேண்டாம் 

கொய்யா மற்றும் வாழைப்பழம்

கொய்யாப்பழம் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிட்டால், அதனால் அசிடோசிஸ் மற்றும் வாய்வு உற்பத்தி செய்யப்பட்டு, வயிற்று உப்புசத்துடனும், குமட்டல் உணர்வையும், தலைவலி மற்றும் வயிற்று வலியையும்  அதிகமாக ஏற்படும். வயது முதியவர்கள்  இதனை  எடுத்துக்கொண்டால்  பல  சிரமத்தை சந்திக்க நெரிடும்

ஆரஞ்சு மற்றும் பால்

இவை இரண்டும் கலந்த  பழ சாற்றை  எடுத்துக்கொண்டால், வயிற்று உபாதை அதிகரிக்கும். குமட்டல்  வாந்தி  என  அனைத்தும் அதிகரிக்கும் 

பப்பாளி மற்றும் எலுமிச்சை

ஹீமோகுளோபின்  குறைந்து, ரத்த சோகையை  ஏற்படுத்தும். எனவே  இது போன்ற  பழவகைகளை  கலந்து எடுத்துக்கொள்ளாமல்  இருப்பது நல்லது 

Follow Us:
Download App:
  • android
  • ios