Asianet News TamilAsianet News Tamil

உங்கள் வீட்டு பூஜை அறையில் "மறந்தும்" இந்த தவறை செய்து விடாதீர்கள்..! அனைத்து துன்பமும் நம்மையே தாக்கும்...!

நம் வீட்டில் விளக்கேற்றி வைக்கும் போது, சில முக்கிய  விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை நாம் மறந்து விட கூடாது. 

dont do this mistake again in our poojai room
Author
Chennai, First Published Apr 4, 2019, 7:11 PM IST

நம் வீட்டில் விளக்கேற்றி வைக்கும் போது, சில முக்கிய  விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை நாம் மறந்து விட கூடாது. 

விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது. நெய் விளக்கு எண்ணெய் வேப்ப எண்ணெய் இலுப்பை எண்ணெய் தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால் தேவியின் அருளும் மந்திர சக்தியும் கிடைக்கும்.

dont do this mistake again in our poojai room

வீட்டு பூஜை அறையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது நாம் அணைக்கக் கூடாது. வீட்டின் நிலைகளில் குங்குமம் மஞ்சள் வைக்க வேண்டும் இதனால் தீய சக்திகளும் விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும் பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

dont do this mistake again in our poojai room

ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும் வியாதியும் நெருங்காது. சனிபகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது. வீட்டில் பூஜை அறையில் தெய்வப்படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.

நம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும். இது போன்ற சில விஷயங்களை கடைபிடித்து வருவது ஆக சிறந்தது 

Follow Us:
Download App:
  • android
  • ios