மக்களே மறந்தும் வெள்ளிக்கிழமை இந்த தவறை செய்யாதீங்க..! 

நம் முன்னோர்கள் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து இருந்துள்ளனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இப்போதுள்ள இளம் தலைமுறையினர் அதைப் பற்றி சிந்திப்பது கூட கிடையாது. காரணம் மாறிவரும் கலாசாரம், காலநிலைக்கு ஏற்ப நம் மனதும் மாறி வருவதே.. 

அதுமட்டுமல்லாமல் இதற்காக நேரம் ஒதுக்கி, எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் யார்தான் காது கொடுத்து கேட்ப்பார்கள் முன்பெல்லாம் பள்ளி விடுமுறை என்றால்உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். அவர்கள் வீட்டில் எப்படி அணுகுமுறை உள்ளது; நல்லது கெட்டது என அனைத்தையும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஒரு நாள் லீவு கிடைத்தாலே ஓய்வு எடுக்கலாம் என்ற அளவிற்கு மன நிலைமை இருக்கின்றது.

இதிலேயே இப்படி ஒரு மாற்றம் என்றால், என்றோ நம் முன்னோர்கள் சொன்ன விஷயம் இன்று நம் காதில் கேட்கவா போகிறது. இருந்தாலும் அவர்கள் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது என்பதை உணர வைக்கும் இந்த ஒரு பதிவு.

எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என நம் முன்னோர்கள் தெரிவித்து இருப்பார்கள் அல்லவா? அதற்கு காரணம் என்ன தெரியுமா? பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள் சனிகிழமை. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள். மகாலட்சுமி என்றால் தனவரவு என்று பொருள்படும் அதாவது பொன்னும் பொருளும் சேரக்கூடிய நாள் வெள்ளிக்கிழமை. ஆனால் அந்த நாளில் எதையும் இழக்க கூடாது என்பது ஐதீகம். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் எப்படி நம் உடலில் இருக்கக்கூடிய முடியையோ நகையோ அகற்றலாம் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

எனவே தான் வெள்ளிக்கிழமை பொருள் சேரக்கூடிய நாள்...அன்று  எதையுமே இழக்கக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது முடி வெட்டுதல் கூடாது என தெரிவித்து உள்ளனர். மேலும் என்னதான் டெக்னாலஜி வளர்ந்து விட்டாலும் இன்றளவும் பில்லி சூனியம் என பல விஷயங்கள் பற்றி பார்க்கமுடிகிறது. காதால் கேட்க முடிகிறது இன்னும் சொல்லப்போனால் பெண்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியல்களிலும் பேய் சீரியல்கள், காத்து பிடித்துள்ளது, பில்லி சூனியம் வைப்பது என பல காட்சிகளை சீரியலில் காண்பிக்கின்றனர்.

இதனை இல்லத்தரசிகள் ஆர்வமாக பார்க்கின்றனர். இதுபோன்ற பில்லி சூனியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்குப் ஒருவருடைய ஆடை நகம் முடி இவற்றை எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்ற விஷயம் அதன் மூலமாக தெரிய படுத்தபடுகிறது. எனவே தான் இதுபோன்ற காரணத்தினால் கூட ஒரு குறிப்பிட்ட நாளில் முடியை வெட்ட கூடாது என தெரிவித்து இருப்பதாகவும் பேசப்படுகின்றது. உண்மை எது ?பொய் எது? என ஆராய்வதை விட நம் முன்னோர்கள் சொன்ன ஒரு விஷயங்களில் ஒன்று... வெள்ளிக்கிழமை அன்று முடியையோ நகத்தையோ வெட்ட கூடாது என்று கூறி இருக்கிறார்கள். 

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் எதைச் சொன்னாலும் அது ஓர் அறிவியல் உண்மை இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. எனவே முன்னோர்கள் வார்த்தை தெய்வ வாக்காக கருதி இனி வரும் சந்ததியினரும் அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே கருத்து..!