DO YOU LOVE YOUR WIFE OR NOT ?

ஒருவரின் வாழ்கையில் நடக்கும் மிக முக்கியமான ஒன்று என்றால் அது காதல் செய்வது. அதுவும் காதல் என்பதுமே காதலியை மட்டும் நினைக்க தோன்றும். அந்த காதலியையே நீங்கள் திருமணம் செய்துக் கொண்டால் வாழ்க்கை பிரகாசம் தான். இப்படி தான் பல பேர் சொல்வார்கள் . திருமணம் முடிந்த பிறகு பிரிந்து வாழும் தம்பதிகள் ஏராளம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .

ஆனால் லவ் செய்து திருமணம் செய்துக் கொண்டாலோ, அல்லது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் செய்துக் கொண்டாலோ, தன்னை நம்பி வந்த மனைவி மீது காதல் இருக்காதா என்ன?

இப்படி ஒரு சந்தேகம் உங்கள் மனதில் எழுகிறது என்றால், உங்கள் மனைவி மீது நீங்கள் காதல் வைத்துள்ளீர்களா இல்லையா என்பதை நீங்கள் அவர்கள் மீது காட்டும் அக்கரையிலேயே தெரியும்.

அதாவது உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தே தெரிந்துக் கொள்ளலாம்

என்ன செய்ய வேண்டும் ?

தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்

மண் சட்டியும், இரும்புக்கடாயும், மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக் கொடுங்கள்,அதாவது மண் பானையில் உள்ள தண்ணீரை பருகுவதால் நன்மைகள் ஏராளம் .

இருப்பு கடாயில் சமைப்பதால், தேவையான சத்து கிடைக்கும்

கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கருப்பு உளுந்து, மண் பானை தண்ணீர் அருந்த சொல்லுங்கள். இதெல்லாம் செய்தாலே போதும் உங்கள் மனைவி கண்டிப்பாக ஆரோக்கியமாக இருப்பார்