Asianet News TamilAsianet News Tamil

நெற்றியில் பொட்டு வைப்பதால் சுகப்பிரசவம் ஆகுமா? குங்குமம் வைப்பதன் உண்மையான பின்னணி என்ன தெரியுமா? 

Significance of Kumkum : நெற்றிக்கு மத்தியில் அழுத்தம் கொடுத்து பொட்டு வைப்பதால் நிறைய நன்மைகள் கிடைப்பதாக முன்னோர் கூறியுள்ளனர். 

do you know why hindu married women apply kumkum on their forehead in tamil mks
Author
First Published Aug 15, 2024, 7:50 PM IST | Last Updated Aug 15, 2024, 7:57 PM IST

இன்றைய காலத்தில் பலர் நவநாகரீகம் என்ற பெயரில் பொட்டு வைப்பதை தவிர்க்கின்றனர். பொட்டு ஸ்டைலாக இருப்பதை தவிர்ப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் பொட்டு வைப்பதன் பின்னணியில் பல நன்மைகள் இருப்பதாக முன்னோர் சொல்லி சென்றுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை நெற்றியில் குங்குமம் இடுவது மரபாகும். 

குங்குமத்தை பொட்டாக வைப்பதன் பொருள் தெரியாமல் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்.  அது மங்கள அடையாளம். உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பொட்டு என்பது சாதாரணமானது அல்ல. இரு புருவங்களுக்கு நடுவில் குங்குமத்தை பொட்டாக வைப்பதால் நினைவாற்றல் அதிகமாகும். சிந்தனை திறனும் கூட பல மடங்கு அதிகரிக்கும். இதை மருத்துவ ஆராய்ச்சி கூட நமக்கு விவரிக்கிறது. 

நெற்றிக்கு மத்தியில் அழுத்தம் கொடுத்து பொட்டு வைப்பதால் மூளையின் செயலாற்றல் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.  அது மட்டுமின்றி மஞ்சள், சுண்ணாம்பு, படிகாரம் போன்றவற்றிற்கும் எதிர்மறையான சக்தியை விரட்டும் சக்தி உள்ளது. அதன் அடிப்படையில் செய்யப்படும் குங்குமம் தான் கோயில்களில் கொடுக்கிறார்கள்.  

இதையும் படிங்க:  குங்குமத்தை 'இந்த' விரலில் எடுத்து நெற்றியில் வையுங்கள்.. கணவனின் ஆயுள் அதிகரிக்கும்..!

இந்திய யோகக் கலையின் அடிப்படையில் பெண்களின் இரு புருவ மத்தியை 'ஆக்ஞா சக்கரம்' என சொல்வார்கள். இந்த பகுதியில் எலக்ட்ரோ மேக்னடிஸம் என்ற மின்காந்த ஆற்றல் வெளியேறும். இந்த இடத்தில் குங்குமத்தை பொட்டாக வைப்பதால் அங்கு  குளிர்ச்சி அடையும். இதனால்  நேர்மறையான எண்ணங்கள் தோன்றும் வாய்ப்புள்ளது.  இதனால் கருத்தரித்த பெண்களுக்கு சுகப்பிரசவம் கூட ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

கல்யாணம் ஆன பெண்கள் நெற்றியின் வகிட்டில் பொட்டு வைப்பதை பார்த்திருப்போம். அதற்கு கலாச்சார முறையில் அர்த்தம் உள்ளது. உடல் ஆரோக்கியம் கூட நன்மைகள் ஏராளம் உண்டு. நெற்றி வகிட்டில் தங்கள் விரல்களால் பெண்கள் தொடுவதால், அவர்களுடைய அடி வயிற்றில் இருக்கும் பாலியல் சுரப்பி தூண்டப்படும். இதனால் கர்ப்பப்பை வலிமை அடைகிறது. ஆகவே திருமணமான பெண்கள் தங்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு கொள்ள வலியுறுத்தப்படுகிறது.  

இதையும் படிங்க:  சிவன் வழிபாட்டில் குங்குமம்  கொடுக்கப்படுவதில்லை ஏன்? ஒளிந்திருக்கும் ரகசியம் இதோ..!!

குங்குமத்தின் மகிமைகள்: 

  • வளைகாப்பு வைப்பது எல்லோரின் ஆசியையும் பெறதான். இந்த நேரத்தில் எல்லோரும் பொட்டு வைத்து சந்தனம் பூசி ஆசி கொடுப்பதால் அந்த பெண்ணின் கர்ப்பப்பை செயல்பாடு தூண்டப்படும். இதனால் பெண்கள் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். கர்ப்பமான 7ஆவது, 9ஆவது மாதத்தில் இதை செய்வதால் குழந்தையின் தாய்க்கு மகிழ்ச்சி கிடைக்கும். குழந்தையும் ஆரோக்கியமாக வளர்ச்சி காணும்.  
  • மோதிர விரலால் நெற்றியில் குங்குமம் வைப்பது சிறந்தது. குங்குமத்தை மறந்தும் இடது கையில் வைக்க கூடாது.  
  • மங்களமும், ஆரோக்கியமும் வாழ்வில் செழிக்க வலது கையின் கட்டை விரல், மோதிர விரலால் குங்குமம் வையுங்கள். 
  • கட்டை விரல் கொண்டு குங்கும பொட்டு மனதில் துணிச்சல் அதிகமாகும்.  
  • நீங்கள் ஆள்காட்டி விரல் மூலம் குங்குமம் வைத்தால் நிர்வாகத்தில் திறம்பட செயல்படுவீர்கள். 
  • உங்களுடைய நடுவிரலால் குங்குமம் பொட்டு வைத்தால் ஆயுள் அதிகமாகும். 
  • நமக்கு பிடித்த மாதிரி ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் சுப நாட்களில் குங்குமம் இட்டு கொள்வது உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios