பெண்கள் அதிகளவில் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா?
பெண்கள் தங்கள் உடல்நலத்தை விட குடும்பத்திற்கே முன்னுரிமை கொடுப்பதால், அவர்களுக்கு ரத்தசோகை, மார்பக புற்றுநோய், மன அழுத்தம் மற்றும் ஆஸ்டியோபொராசிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனைகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன.
பெண்கள் எப்போதும் தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் குடுப்பத்திற்காகவே மாங்கு மாங்கு உழைப்பர்கள். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அவர்கள் மீது நாம் கவனம் செலுத்துவதே இல்லை. இதனால் அவர்களுக்கு அதிகமாக ஏற்படு சில ஆரோக்கியப பிரச்சனைகளை பற்றி இங்கே பார்ப்போம்.
அனீமியா என்னும் ரத்தசோகை
ரத்த சோகை மற்றும் இரும்பு சத்துக்குறைபாடு என்பது இந்தியாவில் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. அதுவும், ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம் மாதவிடாயில் அதிக ரத்த போக்கு, வயிற்றில் பூச்சிகள் இருப்பது, கருவுற்றிருப்பது போன்றவை காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் 75 சதவீதம் பெண்கள் இரும்புச்சத்து பற்றாக்குறையாலும் அனீமியாவிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்! மாரடைப்பு வந்தா கண்களில் இதெல்லாம் தெரியுமாம்!
மார்பக புற்றுநோய்
மார்பகப் புற்றுநோயால பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. குறிப்பாக இந்திய பெண்கள் தான் மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
மன ஆரோக்கியம்
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள், சமூக அழுத்தங்கள், குடும்ப வன்முறைகள் போன்ற பல காரணங்களால் மன ஆரோக்கியம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆண்களே தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.. அப்புறம் நடக்கறதை மட்டும் பாருங்க!
ஆஸ்டியோபொராசிஸ்
ஆஸ்டியோபோராசிஸ் என்பது கால்சியம் மற்றும் பிற எலும்பு தாதுக்களின் இழப்பால் உண்டாகுவது. இதனால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. மெனோபஸ் காலகட்டத்திற்கு பிறகு இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். கால்சியம் பற்றாக்குறை, போதிய ஊட்டச்சத்து உணவு இல்லாமை, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றால் இந்த ஆஸ்டியோபொராசிஸ் ஏற்படுகிறது.