இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்! மாரடைப்பு வந்தா கண்களில் இதெல்லாம் தெரியுமாம்!
மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சனைகளுக்கான அறிகுறிகளை கண்கள் முன்கூட்டியே உணர்த்தும். சேதமடைந்த இரத்த நாளங்கள், பார்வையிழப்பு, விழித்திரையின் நிற மாற்றம் போன்றவை இதயப் பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம்.
ஒரு காலத்தில் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு 60 வயதை கடந்த ஆண்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு அதிகளவில் இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு உணவு பழக்கம் வழக்கங்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த மாதிரி இதய பிரச்சனையை முன்கூட்டியே நம் உடலில் சில அறிகுறிகளை எப்படி உணர்த்தும் என்பதை பார்ப்போம். இதய ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பதை விரிவான கண் பரிசோதனை மூலமும் கண்டறியலாம்.
இதையும் படிங்க: ஆண்களே தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.. அப்புறம் நடக்கறதை மட்டும் பாருங்க!
மாரடைப்புக்கான கண் சார்ந்த அறிகுறிகள்:
உங்களுக்கு மாரடைப்பு அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், கண்களில் காட்டுமாம்.
சேதமடைந்த இரத்த நாளங்கள்:
ஒரு கண் பரிசோதனையின் போது, மருத்துவர் உங்கள் இரத்த நாளங்களில் ஏதேனும் பிரச்சனை அல்லது சிறிய சேதத்தை உறுதி செய்தால் உடனடியாக உங்கள் இதயத்தையும் பரிசோதித்து விடுங்கள்.
மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக கண்களின் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால், சிலர் இதை சாதாரண கண் நோயாகக் கருதுவர். இவை கண் பிரச்சனையை அதிகரிக்கலாம். இதனால் உடனடியாக உங்கள் இதயத்தையும் பரிசோதித்து விடுங்கள்.
பார்வையிழப்பு:
இது மாரடைப்பின் மிகவும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும். மாரடைப்புக்கு முன்னதாக கண்களில் மஞ்சள் நிறம் தோன்றலாம். இந்நிலையில் கண் இமைக்கு அருகில் மஞ்சள் தகடு தோன்றும். இந்த மாற்றங்கள் குவிய, விழித்திரை இஸ்கெமியாவை ஏற்படுத்துகின்றன.
விழித்திரையின் நிறத்தில் மாற்றம்:
உங்கள் இதயம் சரியாக செயல்படாதபோது, உங்கள் பார்வையில் திடீர் மாற்றம் ஏற்படலாம். அதாவது நேஷனல் ஸ்ட்ரோக் அசோசியேஷன், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நபர்களுக்கு சில வகையான பார்வை மாற்றம் உள்ளது. இது மூளையின் ஒரு பகுதியை சேதப்படுத்தும். இதன் விளைவாக, பார்வை குறைபாடு, குருட்டுத்தன்மை போன்ற காட்சிப் புலனுணர்வுச் சிக்கல்கள் ஏற்படலாம்.