'மதியம்' தான் உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம் என்று சொன்னால் நம்புவீங்களா? உண்மையை தெரிஞ்சிகலாம் வாங்க..!!
மக்கள் அடிக்கடி உடற்பயிற்சி செய்ய காலை அல்லது மாலை நேரத்தை கடைபிடிக்கிறார்கள. ஆனால் உடற்பயிற்சிக்கான சிறந்த நேரம் மதியம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீங்களா? வாங்க இது பற்றி தெரிஞ்சுக்கலாம்...

தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு எந்த நேரம் சிறந்தது என்ற கேள்வி பெரும்பாலும் மக்களின் மனதில் இருக்கும். பெரும்பாலான மக்கள் காலை அல்லது மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் உடற்பயிற்சியின் அதிகபட்ச பலன்களைப் பெற காலை அல்லது மாலை சரியான நேரம் அல்ல என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஹெல்த் லைனில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும் என்றாலும் அது அதிகபட்ச நன்மைகளை வழங்காது. அப்போ எப்போ தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். உடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் 'மதியம்' தான். ஆம், இது விசித்திரமாக தோன்றலாம். ஆனால் அறிக்கையின் படி மதியம் செய்யப்படும் உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மதியம் 2 மணி முதல் 6 மணி வரை உடற்பயிற்சி செய்யுங்கள் இதுவே சிறந்த நேரம்.
இதையும் படிங்க: சாப்பிட்ட பிறகு நடப்பதால் பல நோய்களை தடுக்கலாம்.. எத்தனை அடிகள் நடக்க வேண்டும்?
மதிய நேரம் ஏன் பலன் தருகிறது?
- ஆய்வின் படி, மதியத்திற்கு பிறகு உடலில் செயல்திறன் அழுவு அதிகமாக இருக்கும்.
- உடல் வெப்பநிலை நாள் முழுவதும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக தசைகளின் வலிமையையும் அதிகமாக இருக்கும் மற்றும் உடல் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்சைமேன்களும் சுறுசுறுப்பாக இருக்கும்.
- ஆய்வின்படி பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக உடல் உடற்பயிற்சிக்கு தயாராக உள்ளது மற்றும் உடற்பயிற்சியில் இருந்து அதிகபட்ச முடிவுகள் தரப்படுகின்றன.
- அதே சமயம் காலை அல்லது மாலையில் அதே முடிவுகள் கிடைக்காது.
இதையும் படிங்க: நீண்ட ஆயுள் முதல் எடை குறைப்பு வரை.. தினமும் உடற்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா?
மதியம் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
- மதியம் உடற்பயிற்சி செய்வதால் தசை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு.
- பிற்பகலில் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு கணிச்சமாக குறைந்து இருக்கும். இதன் காரணமாக காயம் ஏற்படும் அபாயமும் குறைவாகவே உள்ளது.
ஆழ்ந்த உறக்கத்தைப் பெற உதவுகிறது:
மதியத்துக்கு பிறகு செய்யும் உடற்பயிற்சி நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது மாலையில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு ஆற்றலை தருகிறது மற்றும் தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் மதினத்திற்கு பிறகு உடற்பயிற்சி ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது.