அட... 2 நிமிடம் இதை படிச்சிட்டு அடுத்த  வேலையை பாருங்க மக்களே..! 

நாம் ஏதாவது பேசிக்கொண்டு இருக்கும் போது, சற்று நக்கலாக பேச பயன்படுத்தும் வார்த்தைகளில் சில உண்டு. உதாரணத்திற்கு .. ஆமாம் நீ பெரிய வெங்காயம் பாரு..

இந்த வார்த்தையை விளையாட்டாக பயன்படுத்தினாலும், அதில் உள்ள நன்மைகள் பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். 

நன்மைகள்

பெண்கள் வெங்காயத்தை பச்சையாக மென்று சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சனை வரவே வராது. அதேபோன்று காய்ச்சல் இருப்பவர்கள் வெங்காயத்துடன் சற்று மிளகு சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குறைந்துவிடும்.

உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தாலே போதும் உடல் சூடு தணியும். யாருக்காவது மயக்கம் வந்தால் உடனடியாக வெங்காய சாற்றை சற்று பிழிந்து எடுத்து மயக்கம் அடைந்தவரின் மூக்கில் விட்டால் மயக்கம் தெளியும்.

அதேபோன்று காதில் ஏற்படும் சில பிரச்சனைகள்... அதாவது இரைச்சல், சீழ் வடிதல் போன்றவற்றிற்கு வெங்காய சாற்றை இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் காதில் விட்டு வர அவை மிக எளிதில் குணமாகும்.

அதேபோன்று மூல சூடு இருப்பவர்கள் பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும் கற்கண்டும் தேவையான அளவு சேர்த்து உண்டு வந்தால் சரியாகிவிடும். பொதுவாகவே உணவில் தினமும் வெங்காயத்தை சேர்த்து சமைத்து வந்தால் இதய நோய் வராமல் தவிர்க்கலாம்.

இது தவிர பல வகையான தோல் நோய்களுக்கும் வெங்காயம் பேருதவியாக இருக்கும். ரத்த சோகை இருப்பவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை மெல்ல மெல்ல குறையும். பச்சை வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பல் தொடர்பான நோய்களை அண்டவே அண்டாது. 

மனம் நொந்து போன மக்கள்..! தங்கம் இவ்வளவு தான் விலை குறைவா...?

இத்தனை நன்மைகளை செய்யும் வெங்காயத்தில் அப்படி என்னவெல்லாம் இருக்கிறது  என்பதை பாருங்கள்..! 

ஈரப்பதம் - 86.6% ,புரதம் - 1.2%, கொழுப்புச்சத்து - 0.1%, நார்ச்சத்து - 0.6%, தாதுச்சத்து - 0.4%, கார்போஹைட்ரேட்டுகள் - 11.7% அடங்கி  உள்ளது. இத்தனை நல்ல பண்புகளை கொண்டுள்ள வெங்காயத்தை நாம் ஏன் முறையாக பயன்படுத்தக்கூடாது.