கொரோனா வைரஸ் பொறுத்தவரையில் நேரடியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு 80% பரவுகிறது என்றும், அதே போன்று காற்றின் மூலம், அதாவது  தும்பும் போதும், இருமல் வரும் போதும்.. காற்றில் கிருமி கலந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படுவது 20 % என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நாம் பயன்படுத்தும் முகக்கவசம் மற்றும் ரூபாய் தாளில் எவ்வளவு நேரம் வைரஸ் உயிர் வாழும் என்பதனை ஆராய்ந்து தகவலை பிரபல மருத்துவ இதழான தி லேன்செட் (The Lancet) தெரிவித்துள்ளது
   


அதன் படி

முக கவசம் என்றால் - 7 நாட்கள் என்றும்,
ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர், பிளாஸ்டிக் பொருட்கள் - சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என கூறப்பட்டு உள்ளது

மேலும் நாம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் கிருமிநாசினி கொண்டு கொரோனா வைரஸை அழிக்க   முடியும் என்றும் தெரிவித்து உள்ளனர்

 மேலும் காகிதம், டிஷ்யூ பேப்பர் - கொரோனா வைரஸ் 3 மணி நேரத்திற்கு குறைவாகவும்,

மரப்பலகை, துணி - 2  நாட்களுக்கும் கொரோனா வைரஸ் உயிரோடு இருக்கும் என ஆய்வில்  தெரியவந்துள்ளது. எனவே முக கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது முகவும் முக்கியம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் பிளாட்டிக் பொருட்கள் - 3 நாட்கள் , அட்டை பெட்டியில் - 24 மணி நேரமும், தாமிரம் - 4 நாட்கள்  வரை  உயிருடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நாம் எங்கு வெளியில் சென்று வந்தாலும்  வீட்டிலேயே இருந்தாலும் அடிக்கடி கை கழுவுதல் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.மேலும் சமூக விலகல் கடைப்பிடிப்பதும் மிக முக்கியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது