இருக்குற தொல்லையிலே பெரிய தொல்லை இந்த பொடுகு தொல்லை...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி,அனைவருக்கும் எளிதில் பற்ற கூடியது பொடுகு

ஒருமுறை பொடுகு வந்துவிட்டால், அவ்வளவு சீக்கிரம் எளிதில் நீக்க முடியாது.

மேலும்,அதிக தலைமுடி உதிர்வையும்,அதிக வறட்சியும்  கொடுக்கும் இந்த பொடுகு.

ஒரு சில பூஞ்சைகளாலும் பாக்டீரியாக்களாலும் தான் பொடுகு வருகிறது.

இதனை எல்லாம் மிக எளிதில்,போக்க பாட்டி வைத்தியம் இதோ...

பாலுடன் வால் மிளகு பவுடரை கலந்து தலையில் தேய்த்து,15  நிமிடம் கழித்து தலைமுடியை  ஆசாவும். வாரம் ஒரு  முறை இது போன்று செய்து வந்தால் போதும், பொடுகு பறந்து போகும்.

இதே போன்று பூஞ்சை தொடரை அகற்றும் தன்மை கொண்ட பசலை கீரையை   அரைத்து தலையில் 20 நிமிடம் பின் அலசவும்

அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி பின் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டினால் பொடுகு மறையும்.

மருதாணி இலையை  அரைத்து அத்துடன் கொஞ்சம் தயிர்,எலுமிச்சை சாறு கொஞ்சம்  சேர்த்து, கூந்தலின் அடிபாகத்தில் தடவி வர, நல்ல பலன் கிடைக்கும்.ஒரு 15 நிமிடம்  இருந்தால் போதுமானது

மிக சிறந்த வழி

யூகலிப்டஸ் எண்ணெயை சூடாக்கி, தலையில் தடவி மசாஜ்  செய்த பின்னர்,சூடான தண்ணீரில் ஒரு துண்டை  நனைத்து  தலை முடியை சுற்றி சில நிமிடங்கள்  வைக்கவும்.

பின்னர் அரை மணி  நேரம்  கழித்து குளித்தால்,பொடுகு காணாமல் போகும்.