சிரிக்க கூட சங்கடப்படும் மஞ்சள் நிற பல் கொண்டவரா நீங்கள்...? தூக்கி ஓரமா போடுங்க உங்க கவலையை....

40 வயது கடந்துவிட்டாலே, மூன்று மாதத்திற்கு ஒரு முறை மெடிக்கல் செக் அப் செய்துக்கொள்ள வேண்டிய  கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

அதாவது  நாம் வாழும் இந்த மெக்கானிக்கல் லைப்ல,உண்ணும் உணவு முறையில்  முற்றிலும்  மாற்றம் ஏற்பட்டு விட்டதால் பல நோய்களுக்கு ஆளாகிறோம்.

அதிலும் குறிப்பாக உடல் உறுப்புக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.அதற்கான  சிகிச்சை முறை எல்லாம் எடுத்துக்கொண்டால்,அதிலிருந்து முழு நிவாரணம் பெற  முடியும்..சிலருக்கு அவர்களது நோய் எதிர்ப்பு தன்மையை  பொருத்து மாறுபடும்..

இதெல்லாம்  ஒருபக்கம் இருக்க,சிறு வயதிலிருந்தே  நாம் மருத்துவரை அணுகும் ஒரு  விஷயம் என்னவென்றால்..அது நம்  பல்லுக்காக தான் இருக்கும்...

சொத்தை பல் முதல் வேறு பல் வைப்பது வரை சிறு வயதிலிருந்தே,நமக்கும்  பல் மருத்துவர்களுக்கும் ஒரு  ஒற்றுமை உண்டு என்றே சொல்லலாம்.

அழகாய் சிரிக்க...

நாம் சிரிக்கும் போது,நம் முகத்தின் அழகை மேலும் அழகாக காண்பிப்பது நம் பற்கள் தான் ...

அப்படிப்பட்ட  நம் பற்கள் மஞ்சள்  நிறமாக மாறினாலோ அல்லது சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் ஒருவிதமான மாவு படிந்த மாதிரி காணப்படுவது...சிரிக்கும்  போது பற்கள் ஒரு விதமான மஞ்சள் நிறமாக காணப்படுவது....

இவை எல்லாம் நாம் எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.மேலும் இது போன்ற ஒரு சிகிச்சை இருக்கு  என்பது நிறைய பேருக்கு இன்றளவும் தெரியாது என்பது தான் உண்மை....

பல் சுத்தப்படுத்துதல்

பல் சிதைவு, ஈறு நோய் ஆகியவற்றை தவிர்க்க டென்டல் ஸ்கேலிங் மற்றும் பாலிஷிங் செய்து கொள்வது நல்லது.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்வது மிகவும் நன்று.

தொற்றுகள், நோய்கள் வாயில் இருந்து மொத்த உடலுக்கும் பரவி, ஒருவரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும்.

அதனால் வாயை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது முக்கியமானது.

ஸ்கேலிங் செய்வதால் பற்காறை அகற்றப்படுகிறது.பாலிஷிங் மூலம் கரைகள் மற்றும் மீதமுள்ள பற்கறை நீக்கப்பட்டு பற்கள் பளபளப்பதுடன் பல்சிதை பக்கத்தில் கூட வராது.

சரியான நேரத்தில்,ஸ்கேலிங் செய்துக்கொண்டால்,நம் பற்கள் பளப்பளப்பாக காணப் படுவதுடன் அனைவரின் முன் நம்ம்பிக்கையுடன் சிரிக்கவும் செய்யலாம்.