do u know the meaning of maangalyam thathuvanaaya
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயயக்கப்படுகிறது என பெரியவர்கள் கூறுவதை பார்த்து இருப்போம்.
வாழ்வில் நடக்கக்கூடிய ஒரு அற்புதமான ஒரு நிகழ்வு என்றால் அது திருமணம் தான் . அவ்வாறு சீரும் சிறப்பாக நடத்தப்படும் திருமணத்திற்கு, மந்திரங்கள் ஓதுவது வழக்கம் . குறிப்பாக எந்த இந்து திருமணமாக இருந்தாலும் அதில் கூறப்படும் மந்திரத்தில் மாங்கல்யம் என தொடங்கும் மந்திரம் தான் மிகவும் பிரசித்தி பெற்றது .
அவ்வாறு ஓதப்படும் மந்திரத்தில் உள்ள பொருள் என்னவென்று இதுவரை நமக்கு தெரியுமா என்றால்...சரியாக விளக்கம் கூற முடியாத நிலை தான் ......
மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்’ என்னும் குறித்த மந்திரத்தின் பொருள் என்னவென்றால் , இன்று முதல் தொடங்கும் நம் இல்லற வாழ்வு நல்ல முறையில் தொடங்க வேண்டும் என்றும், என் வாழ்வில் நடக்கும் சுக துக்கங்கள் அனைத்திலும் உறுதுணையாக இருந்து நூறாண்டு காலம் நல்வாழ்வை வாழ்வாயாக “ என வாழ்த்தி ,மணமகள் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டுவார் மணமாப்பிள்ளை
