First Solar Eclispe 2022: இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நிகழ்கிறது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி அதிகாலை 4: 08 மணி வரை நீடிக்கும்.
இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நிகழ்கிறது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி அதிகாலை 4: 08 மணி வரை நீடிக்கும். நள்ளிரவில் இந்த நிகழ்வு நடப்பதால், இந்தியாவில் பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும்.

பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் படி, இரண்டுமே அசுபமானவைகளாக கருதப்படுகின்றன.
இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நிகழ்கிறது. சூரியனின் கதிர்கள் மறையும் நேரம் அசுபமானதாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் என்பது அறிசியல் முதல் ஆன்மீகம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
கிரகணம் சமயத்தில் செய்யக்கூடாதவை:
கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.

அதேபோன்று, கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது அவசியம். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
கிரகணம் முடிந்த பிறகு செய்ய வேண்டியவை:
கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு வீட்டை சுத்தம் செய்யுங்கள். பிறகு குளித்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு, கடன் தொல்லையில் இருந்து விடுபட தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால் சிறந்தது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும்.

கிரகணத்திற்குப் பிறகு தானம் கொடுக்க வேண்டும். கிரகணத்திற்குப் பிறகு, தானம் செய்வது ஐதீகத்தின் படி சிறந்த ஒன்றாகும்.
கிரகணம் முடிந்ததும் குளிக்கவும். இல்லையென்றால், புனித நதிகளின் நீரை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும். கிரகணம் முடிந்ததும், புனிதமான கங்கை நீரை வீட்டின் மூலைகளில் எல்லா திசைகளிலும் தெளிக்கலாம். அதனால் கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்களின் எதிர்மறை விளைவு நீங்கும்.
