பாத்திரம் கழுவும் சோப் சிலருக்கு கைகளில் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவர்களுக்கான ஒரு மாற்றை மருத்துவர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
How to make dish wash liquid at home
பாத்திரம் கழுவும் சோப்புகளை பயன்படுத்தும் பொழுது சிலருக்கு கைகளில் எரிச்சல், கைகளில் தோல் உரிந்து வருதல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம். இது மட்டுமல்லாமல் தரை மற்றும் சமையலறையை சுத்தப்படுத்தும் கிளீனர்களும் ஒவ்வாமையை அதிகரிக்கின்றன. இதில் உள்ள ரசாயனங்கள் நம் உடலுக்கு தீங்கு தருவதோடு சுற்றுச்சூழலுக்கும் தீங்கை ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக மருத்துவர் கார்த்திகேயன் பயோ என்சைம் சோப்பை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார். இது இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் அலர்ஜிகள் ஏற்படுவதில்லை. மேலும் பாத்திரங்களையும் பளபளக்கச் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
பயோ என்சைம் தயாரிக்க தேவையானப் பொருட்கள்
இந்த சோப்பை தயாரிப்பதற்கு எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழ தோல்கள், வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, தண்ணீர், பிளாஸ்டிக் பக்கெட் அல்லது பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். தயாரிப்பு விகிதமானது மூன்று பங்கு எலுமிச்சை தோல்கள் அல்லது ஆரஞ்சு தோல்கள் எடுத்துக் கொண்டால் ஒரு பங்கு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பயோ என்சைம் சோப்பு செய்வதற்கு 10 மடங்கு தண்ணீர் தேவை. சுத்தமான கண்டெய்னரில் தண்ணீரை ஊற்றி வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையை சேர்க்க வேண்டும். நாட்டு சர்க்கரை சேர்ப்பது நொதித்தல் முறைக்கு உதவி புரிகிறது. அதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோல்களை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.
பயோ என்சைம் தயாரிப்பது எப்படி?
கண்டெய்னரில் மூன்றில் ஒரு பங்கு மேல் பகுதியில் காலியிடம் விட வேண்டும். நொதித்தல் முறையின் பொழுது வாயுக்கள் உருவாகும் என்பதால் இந்த இடைவெளி அவசியமாகும். இந்த கண்டெய்னரை மூடிக்கொண்டு மூடி விடவும். முதல் வாரத்தில் தினமும் மூடியைத் தொடர்ந்து உள்ளே உருவாகும் வாய்களை வெளியேற்றிவிட வேண்டும். திறக்காமல் அப்படியே விட்டால் அழுத்தம் காரணமாக கண்டெய்னர் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு வாரம் முடிந்த பின்னர் அடுத்த சில வாரங்களில் இரண்டு அல்லது மூன்று முறை மூடியை திறந்து வாயுக்களை வெளியேற்ற வேண்டும். ஒரு ஸ்பூன் ஈஸ்ட் சேர்த்தால் நொதித்தல் செயல்முறை விரைவாக நடைபெறும். ஈஸ்ட் சேர்க்கவில்லை என்றால் பயோ என்சைம் முழுமையாக உருவாக மூன்று மாதங்கள் தேவைப்படும். ஈஸ்ட் சேர்த்தால் ஒரு மாதத்திலேயே பயோ என்சைம் தயாராகி விடும்.
பயோ என்சைம் அலர்ஜி ஏற்படுத்துவதில்லை
சீக்கிரம் பயோ என்சைம் தயாரிக்க விரும்புவர்கள் ஈஸ்ட் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நொதித்தல் முழுமையாக முழுமை அடைந்ததும் எலுமிச்சை தோல்கள் கண்டெய்னரின் அடிப்பகுதியில் தங்கி விடும். திரவம் மேலே தெளிவாக இருக்கும். இந்த திரவத்தை எடுத்து சில துளிகள் சோப்பு திரவத்துடன் கலந்து பயன்படுத்தலாம். ஒரு பக்கெட் தண்ணீரில் சிறிதளவு பயோ என்சைம் கலந்து தரையைத் துடைக்கலாம். கழிவறை, சமையலறை, சிங்க் அடைப்பை நீக்க சிறிதளவு பயோ என்சைமை நேரடியாக ஊற்றலாம். இந்த பயோ என்சைம் ஆனது குறைவான அமிலத்தன்மை கொண்டது. வினிகரை ஒப்பிடும்பொழுது லேசான அமிலத்தன்மையே உண்டு. எனவே எந்த வித பயமும் இன்றி அனைவரும் இதை பயன்படுத்தலாம்.
பாதுகாப்பான பாத்திரம் கழுவும் லிக்யூட் ரெடி
ரசாயனங்கள் நிறைந்த பாத்திரம் கழுவும் சோப்புகளால் கைகளில் அலர்ஜி, ஒவ்வாமை ஏற்படுபவர்கள் கைகளில் எரிச்சல், சிவத்தல், தோல் உதிர்தல் ஆகிய பிரச்சனை இருப்பவர்கள் இந்த இயற்கையான பயோ என்சைம் சோப்புகளை தாராளமாக பயன்படுத்தலாம். இது வீட்டை சுத்தப்படுத்துவதோடு சருமத்தையும் பாதுகாக்கும். ரசாயனங்கள் இல்லாததால் பாத்திரங்கள் கழுவும் நீரால் நிலமும் மாசடையாது.
