Asianet News TamilAsianet News Tamil

3ம் அலைக்கு முன்பே 4ம் அலை தொடங்கி விட்டதா..? தீயாகப் பரவும் கொரோனா..!

 2ம் அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா அலை மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. 

Did the 4th wave start before the 3rd wave ..? Corona spreading like fire ..!
Author
America, First Published Jul 29, 2021, 3:48 PM IST

கொரோனா முதல் அலை, 2ம் அலை படுத்திய பாட்டுக்கு உலகமே சுருண்டு விட்டது. அடுத்து மூன்றாம் அலையை தடுக்க உலகமே போராடி வருகிறது.  2ம் அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா அலை மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. Did the 4th wave start before the 3rd wave ..? Corona spreading like fire ..!

இந்தியாவில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைப் போல, உலகின் மிக சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவிலும், தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதேபோல மார்ச் 8 -க்குப் பிறகு, 4 மாதங்கள் கழித்து  சென்ற மாத இறுதியில் முதல் முறையாக  அமெரிக்காவில் ஒரு நாளில் 1 லட்சத்து 8 ஆயிரம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவானது.Did the 4th wave start before the 3rd wave ..? Corona spreading like fire ..!

தற்போது, ​​அமெரிக்காவில் சராசரியாக தினசரி 63 ஆயிரம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்த புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை அமெரிக்காவின் கவலையை அதிகரித்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீரென அதிகரித்துள்ளது, அமெரிக்காவில் கொரோனாவின் நான்காவது அலை தொடங்கி விட்டதை குறிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏனெனில், கடந்த இரண்டு வாரங்களில், தொற்று பாதிப்புகள் 170 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் அமெரிக்கா உலகின் மூன்றாவது பெரிய நாடு. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை சுமார் 33 கோடி ஆகும், இதில் 17 கோடி மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா தனது மக்கள் தொகையில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போட்ட நிலையிலும், ​​அங்கு கொரோனாவின் நான்காவது அலை  ஏற்பட்டுள்ளது என்பதற்கான எனவே இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன, முதல் காரணம் அரசியல் மற்றும் இரண்டாவது காரணம் சமூகம்.Did the 4th wave start before the 3rd wave ..? Corona spreading like fire ..!

இதில் உள்ள அரசியல் என்னவென்றால், அமெரிக்காவில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்ற முடிவு அவசரமாக எடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னணியில் தலைவர்கள் மற்றும் குடிமக்களிடமிருந்து நிறைய அழுத்தம் வந்தது தான் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios