டீடாக்ஸ் பானங்களை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடலில் இருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறுவதுடன், எடை இழப்பிற்கும் உதவியாக இருக்கும்.
டீடாக்ஸ் உணவுத் திட்டங்கள் உலகெங்கிலும் பெரும் புகழ் பெற்றுள்ளன. எலுமிச்சை, நெல்லிக்காய், கீரை போன்ற ஆரோக்கியமான டீடாக்ஸ் பானங்களை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடலில் இருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறுவதுடன், எடை இழப்பிற்கும் உதவியாக இருக்கும்.
இன்றைய இன்டர்நெட் காலத்தில், கடந்த ஒரு வாரமாக நியூ இயர் 'ரெசல்யூஷன்' பற்றி இணையத்தில் பெரும்பாலோனோர் பதிவிடுவதை காண முடிகின்றது. அதில், இந்த வருடம் நான் 'ஃபிட் ஆவேன்', 'அதிக பயணங்களை மேற்கொள்வேன்', 'புகை பழக்கத்தைக் கைவிடுவேன்', 'புத்தக வாசிப்பை அதிகப்படுத்துவேன்' என்று ஒவ்வொருவரின் புத்தாண்டு உறுதிமொழிகள் ஏராளம். அதில் பெரும்பாலானோர் இந்த ஆண்டு முதல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றன. இது போன்ற 'ரெசல்யூஷன்' அனைத்தும் ஒரு சில மாதங்கள் கடந்ததும் மறந்து போய் விடும். பெரும்பாலானோர், தாங்கள் எடுத்துக்கொண்ட 'ரெசல்யூஷன்' ஐ மறந்து சாதராண பழைய நிலைக்கே திரும்பி விடுவார்கள். அப்படி இல்லாமல் நீங்கள் எளிமையான முறையில் உடல் எடையை குறைத்து உடலினை ஆரோக்கியமாக வைத்து கொள்ள டீடாக்ஸ் பானங்கள் பெரும் உதவியாக உள்ளன. பொதுவாக உங்களது உணவில் இயற்கையான டீடாக்ஸ் பானங்கள் அருந்துவது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுவதோடு உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும் என்று உடற்பயிற்சி ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே ஆரோக்கியம் நிறைந்த டீடாக்ஸ் பானங்கள் குடிப்பது குறித்து சில எளிய டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கீரை மற்றும் எலுமிச்சை சாறு:
நம்முடைய அன்றாட உணவில் கீரை மற்றும் எலுமிச்சை சாறுகளை குடிப்பதன் மூலம் நம்முடைய உடலுக்கு புத்துணர்ச்சியைக்கொடுக்கிறது. மேலும் உடலில் இழந்த திரவத்தை மீட்டெடுக்கவும், உடல் எடை இழப்பிற்கும் உதவியாக இருப்பதோடு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்கிறது.
நெல்லிக்காய் ஜூஸ்:
நெல்லிக்காயில் அதிகளவில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. மேலும் நெல்லியில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், செரிமானப்பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளது. இதோடு உடல் எடைக்குறைப்பதற்கும் உதவுகிறது. எனவே உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு இனி மேல் தினமும் காலை வேளையில் நெல்லிக்காய்களை எடுத்து ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
தேன் எலுமிச்சை இஞ்சி டீ: சூடான இஞ்சி டீயில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்துச்சாப்பிடலாம். இந்த பானத்தைப் பருகுவதன் மூலம் உடலில் உள்ள தேவையில்ல கொழுப்புகள் குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.

இந்துப்பு மற்றும் ஜிஞ்சர் பானம்:
இந்துப்பு மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கும் பானம் தயாரிப்பதற்கு மிகவும் எளிமையானது. இந்த டீடாக்ஸ் பானத்தை தினமும் பருகும் போது, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மேலும் மிளகு இஞ்சி கலந்த பானம், இஞ்சி டீ , காரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் போன்றவற்றையும் நீங்கள் உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மஞ்சள் மற்றும் கிரீன் டீ:
தினமும் காலையில் மஞ்சள் இஞ்சி கிரீன் டீயை குளிர்கால நேரங்களில் தினமும் பருகுவதன் மூலம் தொண்டைக்கட்டு, இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. எனவே பாத்திரத்தில் 2 டம்ளர் எடுத்து அதனுடன் இஞ்சித்துருவல், மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் நல்ல பலனளிக்கும்.
எனவே, இந்த வருடம் முழுவது உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக வாழ இதுப்போன்ற டீடாக்ஸ் பானங்கள் எடுத்து கொள்வது நல்லது.
