ஏறாத ரயிலுக்கு தினமும் டிக்கெட் வாங்கும் கிராம மக்கள்! தயாள்பூர் ரயில் நிலையத்தின் சுவாரஸ்யமான கதை!
மூடப்பட்ட ரயில் நிலையத்தைத் திறக்க வைத்த மக்கள் தினமும் ரயிலில் பயணிக்காவிட்டாலும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இந்தியாவில் வித்தியாசமான ரயில் நிலையங்களில் ஒன்றில் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் அருகில் இருக்கிறது. அந்த ரயில் நிலையத்தில் தினமும் ஊர் மக்கள் ரயில் டிக்கெட் எடுக்கிறார்கள். ஆனால், யாரும் ரயிலில் பயணிப்பதில்லை.
பிரயாக்ராஜ் அருகே இருக்கும் தயாள்பூர் கிராமத்தில் தான் இந்த வித்தியாசமான ரயில் நிலையம் இருக்கிறது. இங்கு எந்த ரயிலும் நின்று செல்வதில்லை. ஆனாலும், ஊர்மக்கள் நிற்காத ரயிலில் பயணிப்பதற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டே இருக்கிறார்.
இந்த தயாள்பூர் ரயில் நிலையத்திற்குப் பின் சுவாரஸ்யமான வரலாறு ஒன்று இருக்கிறது. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, கட்டப்பட்ட ரயில் நிலையம் இது. அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி இதனைத் திறந்து வைத்தார்
இந்தியா, பாரதம்... இரண்டு பெயர்களிலும் எனக்கு பிரச்சினை இல்லை: ராகுல் காந்தி பேச்சு
1954 ஆம் ஆண்டு தயாள்பூர் ரயில் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அப்போது முதல் தொடர்ந்து பயன்பட்டுவந்த தயாள்பூர் ரயில் நிலையம், 2016ஆம் ஆண்டில் ரயில்வே கொண்டுவந்த தர நிர்ணய நிபந்தனைகளால் மூடப்பட்டது. ரயில்வேயின் நிபந்தனைப்படி, இந்த ரயில் நிலையத்தில் போதிய வருவாய் இல்லை என்பதுதான் காரணம்.
மெயின் லைன் ரயில்வே ஸ்டேஷன் என்றால், தினசரி குறைந்தது 50 டிக்கெட்டுகள் விற்பனையாக வேண்டும். கிளை வரிசை ரயில் நிலையமாக இருந்தால், தினமும் குறைந்தது 25 டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தயாள்பூர் ரயில் நிலையம் இந்த நிபந்தனைக்குள் வராததால் மூடப்பட்டுவிட்டது.
ஆனார், தயாள்பூர் கிராம மக்கள் தொடர்ந்து போராடி, 2022ஆம் ஆண்டில் ரயில் நிலையத்தைத் திறக்க வைத்தனர். மீண்டும் தங்கள் ஊர் ரயில் நிலையம் மூடப்படக் கூடாது என்று அந்த ஊர்மக்கள் எண்ணினர். இதனால் தினமும் ரயிலில் பயணிக்காவிட்டாலும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இதன்படி, ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி ஒவ்வொரு நாளும் குறைந்தபட்ச டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். பெரும்பாலும் தயாள்பூர் ரயில் நிலையத்தில் ஒன்றிரண்டு ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இருந்தாலும் தங்கள் ஊரில் ரயில் நிலையம் இயங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஊர்மக்கள் டிக்கெட் வாங்கிக்கொண்டே இருக்கின்றனர்.
ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய இந்தியா! 5 முக்கிய விளைவுகள் என்னென்ன?