உஷார்..! கொரோனாவுக்கு அடுத்தடுத்து யாரெல்லாம் பாதிக்கிறாங்க பாருங்க...! 

இந்தியாவில் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ள நிலையில், தற்போது ராஜஸ்தானில் சிகிச்சைபெற்று வந்த சுற்றுலா பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால்  கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக டெல்லி ஹைதராபாத் பஞ்சாப் மும்பை ஆகிய இடங்களில் தலா ஒருவர் வீதம் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்த இத்தாலிய பயணி உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 69. இவருக்கு கோரோனா அறிகுறி இருந்ததை சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது வரை இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக 173 ஆக இருந்த எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது.நேற்று மட்டும் சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திராவிற்கு திரும்பிய ஒருவருக்கும், பஞ்சாப் மாநிலத்தில் 69 வயது மதிக்கதக்க பெண் ஒருவருக்கும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒருவருக்கும் என மொத்தம் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்து தற்போது வரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு நிலையில் அனைவரும் அவர்களை தனிமைப்படுத்தி கொண்டு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.