Asianet News TamilAsianet News Tamil

12 ராசியினரில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு யாருக்கு உண்டு தெரியுமா..?


நீங்கள் செய்யும் காரியம் நிறைவேறும். வருவாய் வருவதற்கு முன்னே செலவுகள் அதிகரிக்கலாம். சிரித்து பேசும் நண்பர்களே உங்களுக்கு பெரும் தலைவலியாக அமைவார்கள்.

daily horoscope benefits as on 17th march 2020
Author
Chennai, First Published Mar 17, 2020, 12:36 PM IST

12 ராசியினரில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு யாருக்கு உண்டு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள். வாய்ப்புகள் உங்களை தேடிவரும். அச்சுறுத்தல்கள் அகன்று ஆனந்தமாக இருப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

நீங்கள் செய்யும் காரியம் நிறைவேறும். வருவாய் வருவதற்கு முன்னே செலவுகள் அதிகரிக்கலாம். சிரித்து பேசும் நண்பர்களே உங்களுக்கு பெரும் தலைவலியாக அமைவார்கள்.

மிதுன ராசி நேயர்களே...! 

கல்யாண கனவு விரைவில் நிறைவேறும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

நீங்கள் இன்று உற்சாகமாக பணிபுரிவீர்கள்.; கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பல நாட்களாக செய்ய நினைத்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

பிள்ளைகள் வழியில் உங்களுக்கு நன்மை நடக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் முன்னேற்றத்திற்கு புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள்.

தங்கம் வாங்க சரியான நேரம்..! சவரன் விலை அதிவேக குறைவு..!

கன்னி ராசி நேயர்களே..!

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புதியவர்களின் சந்திப்பு கிடைக்கும். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் உங்களுக்கு வந்து சேரும்.

daily horoscope benefits as on 17th march 2020

துலாம் ராசி நேயர்களே...!

எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வழக்குகளில் இருந்து வந்த நிலைமை மாறும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

நண்பர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சி ஏற்படும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். தொலைபேசி வழித் தகவல் உங்களுக்கு நன்மை பயக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

எதிர்பாராத வரவால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்... குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிரியமான ஒருவரை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பம் ஏற்படலாம். பயணங்களால் நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.

daily horoscope benefits as on 17th march 2020

மீன ராசி நேயர்களே...!

வரவு திருப்தியாக இருக்கும்.புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios