மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை..! 

கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம்  தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைப்பது  வழக்கம்.

தற்போது உலகமெங்கும் போராடி  வரும்  கொரோனா  எதிரொலியால் 14.2 கிலோ எடையுடைய மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.65 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்தக்கவலை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

சென்னையில் விற்பனையாகும் சிலிண் டரின் விலை ரூ.826-ல் இருந்து ரூ.761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே போன்று, மும்பையில் ரூ.714.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.774.50 ஆகவும், டெல்லியில் ரூ.744 க்கு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது 

ஆண்டுக்கு தலா 12 கியாஸ் சிலிண்டர்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் மானிய விலையில் கொடுக்கப்படுகிறது.தற்போது கொரோனா எதிரொலியால் முழுவதுமே பொருளாதாரத்தில் பெரும்  பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில்,மத்திய அரசு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது