முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான ஹைடன் சென்னை தி நகரில் ஷாப்பிங் செய்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் பகிர்ந்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான ஹைடன் சென்னை தி நகரில் ஷாப்பிங் செய்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் பகிர்ந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

6 அடிக்கும் மேலாக உயரமுடைய ஹைடனை பார்த்த உடனே ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். இந்நிலையில் தன்னை யாரும் அடையாளம் காணக் கூடாது என பெரிய மீசை மற்றும் தாடியை ஒட்டிக்கொண்டு சென்னை தி நகர், ரங்கநாதன் தெருவில் ஷாப்பிங் செய்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து இவர் ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 3 முறை விளையாடி உள்ளார். அதன்பின்னர் எப்போதெல்லாம் ஐபிஎல் தொடர் நடக்கிறதோ அப்போதெல்லாம் சிஎஸ்கே அணிக்காக சென்னை வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கிடைப்பட்ட நேரத்தில் தான் ஷாப்பிங் செய்து அசத்தியுள்ளார்.

இது எதற்காக என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார் ஹைடன். அதில், ஆயிரம் ரூபாய்க்கு குறைவான பொருளை வாங்க முடியாது என தன்னுடைய நண்பர் வார்னே சவால் விடுத்து இருந்ததாகவும், ஆனால் டீ நகருக்கு சென்று வாட்ச், சட்டை, லுங்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மிக குறைந்த விலையில் வாங்கினேன்.. இதற்கு உள்ளூர் சிறுவன் ஒருவன் உதவி செய்ததற்காக நூறு ரூபாய் கொடுக்கவும் செய்தேன் என பதிவிட்டு உள்ளார். 

View post on Instagram

மேலும் இதன் தான் சவாலில் நான் வெற்றி பெற்றதாகவும்தெரிவித்து உள்ளார் ஹைடன். இந்தியர்கள் பொதுவாகவே கிரிக்கெட் என்றாலே உயிரையே விடுவார்கள். எந்த நாட்டு வீரர்களாக இருந்தாலும் கிரிக்கெட் வீரர் என்றாலும் மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள்.

ஆனால் சென்னை நகரில், அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறுவேடத்தில் வந்து ஷாப்பிங் செய்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.