மசால் தோசைக்கு சாம்பார் இல்லையா? வழக்கு போட்ட நபர்.. ஹோட்டலுக்கு 3500 அபராதம் விதித்த நீதிமன்றம்..

சாம்பார் வழங்காமல் மசால் தோசை வழங்கிய ஹோட்டலுக்கு ரூ.3500 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Court fined Rs 3500 for hotel not providing sambar to Masal Dosa.

மசால் தோசை என்பது பலருக்கும் பிடித்த உணவாக உள்ளது. அதனால்தான் பெரும்பாலானோர் காலையிலும் மாலையிலும் சுவையான மசால் தோசையை விரும்பி சாப்பிடுகின்றனர். பொதுவாக ஹோட்டல்களில் சாம்பார் மற்றும் சட்னி வகைகளுடன் மசால் தோசை பரிமாறப்படுகிறது. ஆனால் சுவையான மசால் தோசையுடன் சாம்பார் வழங்கவில்லை என்பதற்காக நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆம். வாடிக்கையாளர் ஒரு உணவகத்தில் இருந்து மசால் தோசை பார்சலை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்சலைத் திறந்ததும் தோசையுடன் சட்னி மட்டும் இருப்பதைக் கவனித்தார்.அதில் சாம்பார் இல்லாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

பீகாரில் வசிக்கும் மணீஷ் பதக், ஆகஸ்ட் 15, 2022 அன்று தனது பிறந்தநாள் என்பதால் வெளியில் இருந்து இரவு உணவைக் கொண்டு வர முடிவு செய்தார்.பீகாரின் பக்ஸரில் ஒரு உணவகத்திற்குச் சென்று ஒரு ஸ்பெஷல் மசால் தோசைக்கு ஆர்டர் செய்தார். மசால் தோசைக்கு 140 ரூபாய் கொடுத்து பார்சலை வீட்டிற்கு கொண்டு வந்தார். ஆனால் வீட்டுக்கு வந்து பார்சலை திறந்து பார்த்தபோது தோசையுடன் கூடிய சாம்பார் இல்லை. தோசையும் சட்னியும் மட்டுமே இருந்தது. இரவு நேரமாகியதால், மறுநாள் காலை உணவகத்துக்குச் சென்ற மணீஷ், உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார்.

ஓட்டல் உரிமையாளர் மணீஷிடம் மொத்த உணவகத்தையும் ரூ.140க்கு வாங்குவீர்களா என்று கிண்டலாக கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மணீஷ் உணவகத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அந்த நோட்டீஸுக்கு உணவக உரிமையாளர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து, மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கறிஞர் புகார் அளித்தார்.

11 மாத விசாரணைக்குப் பிறகு, அந்த உணவகம் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஏமாற்றும் வழக்கு என்பதால், நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த பீகாரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம், தோசையுடன் சாம்பார் வழங்காத உணவக உரிமையாளருக்கு ரூ.3,500 அபராதம் விதித்து உத்தரவிட்டது. 45 நாட்களுக்குள் கட்டணத்தை முடிக்க உணவக உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இல்லையெனில், தாமதமாக பணம் செலுத்துவதற்கு 8 சதவீத வட்டி விகிதம் விதிக்கப்படும். வாடிக்கையாளருக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் துன்பத்தை ஏற்படுத்தியதற்காக உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பதக், நுகர்வோர் உரிமைகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

ஷாக்.. வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் நகம்.. ஒப்பந்ததாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த IRCTC

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios