Asianet News TamilAsianet News Tamil

கொரோனா எதிரொலி: முக்கிய 4 பாயிண்ட்..!

தமிழகத்தில் டாஸ்மாக் இயங்குவதும், இன்னொரு பக்கம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடப்பதும், தமிழகத்தின் மற்ற சில இடங்களில் கொரோனா அறிகுறிகளோடு பலரை தனிமைப்படுத்தி வைத்திருப்பதுவுமாக உள்ளது 

coronas situation in tamilnadu  and people should be so cautious
Author
Chennai, First Published Mar 23, 2020, 11:24 AM IST

கொரோனா எதிரொலி: முக்கிய 4 பாயிண்ட்..! 

இந்தியாவில் மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு  அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அவரவர் வீட்டில்  இருந்தபடியே வேலை செய்வதும், தவிர்க்க முடியாத காரணத்திற்கு மட்டும் வெளியில் வருவதுமாக உள்ளனர். 

இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் இயங்குவதும், இன்னொரு பக்கம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடப்பதும், தமிழகத்தின் மற்ற சில இடங்களில் கொரோனா அறிகுறிகளோடு பலரை தனிமைப்படுத்தி வைத்திருப்பதுவுமாக உள்ளது 

இந்த நிலையில் தற்போது கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் நடப்பது என்ன..! 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க சட்டப்பேரவையை ஒத்திவைக்குமாறு திமுக கட்சியினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். சட்டப்பேரவையை ஒத்திவைக்க மறுப்பதால் கூட்டத்தொடரை புறக்கணித்து  தி.மு.க. கொறடா சக்கரபாணி தெரிவித்தார். இவர்களுடன் தமிழக காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினரும் சட்டப்பேரவையை புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

கோபிசெட்டிபாளையம்:

அருகே நூற்பாலையில் வடமாநில இளைஞர்கள் 2 பேருக்கு கொரோனா அறிகுறி   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  வடமாநில இளைஞர்கள் இருவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் பெருந்துறை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்பாலையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

coronas situation in tamilnadu  and people should be so cautious

ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் மேலும் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் கொரோனா தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பெருந்துறை அரசு மருத்துவமனையில் இதுவரை 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 71 பேர் கொரோனா அறிகுறி தொடர்பான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 71 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே மக்களாகிய நாம் கொரோனா பாதிப்பை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு வீட்டில் இருந்தபடியே தம்மை தாமே தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. அரசுக்கும் இக்கட்டான சூழ்நிலை உருவாக்கி விட கூடாது. 

Follow Us:
Download App:
  • android
  • ios