Asianet News TamilAsianet News Tamil

கொரோனா எதிரொலி...! அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்..! பகீர் கிளப்பும் திக் திக் ரிப்போர்ட்..!

ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,716 ஆக அதிகரித்துள்ளது.

corona status worldwide and shocking report
Author
Chennai, First Published Mar 31, 2020, 11:03 AM IST

கொரோனா எதிரொலி...! அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்..! பகீர் கிளப்பும் திக் திக் ரிப்போர்ட்..! 

உலக அளவில் கொரோனாவால் 7,84,381 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,65,035 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர் என்பது சற்று ஆறுதல் தரும் விஷயமாக அமைந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனவை நினைத்து ஒரு விதமான பயம் நம்மை தொற்றி உள்ளது  

அதன் படி எந்தெந்த நாட்டில் என்னென்ன நிலவரம் என்பதை பார்க்கலாம் 

ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,716 ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 37,780ஆக அதிகரித்துள்ளது.உலக அளவில் கொரோனாவால் 7,84,381 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,65,035 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர்.

corona status worldwide and shocking report

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிகை 1,071லிருந்து 1,251 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,716 ஆக அதிகரித்துள்ளது

இதேபோல் ஒரே நாளில் கொரோனாவுக்கு 812 பேர் இறந்ததால் இத்தாலியில் உயிரிழப்பு 11,591 ஆக அதிகரித்துள்ளது.

பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 3,024 ஆக அதிகரித்துள்ளது.

41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட ஈரானில் கொரோனா காரணமாக 2,757 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 19,988 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,63,479ஆக உயர்ந்துள்ளது.ஒரே நாளில் 565 பேர் உயிரிழந்ததால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3,148 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு  குறித்த தகவல் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. ஆனால் நம்மை  நாமே தனிமைப்படுத்திக்கொண்டு சில நாட்கள் அமைதியாக இருப்பதே சிறந்தது 

Follow Us:
Download App:
  • android
  • ios