கொரோனா எதிரொலி..! பள்ளிக்கல்வித்துறை முக்கிய ஆலோசனை...! 

கோரோனா எதிரொலியாக மக்கள் அவரவர் வீட்டில் முடங்கி கிடக்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த ஒரு நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்த ஒரு நிலையில் இதனை கட்டுப்படுத்தும் பொருட்டும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும் கல்வி நிறுவனங்கள், பள்ளி, டாஸ்மாக், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளம், கேளிக்கை கூடம்  திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமை இப்படி இருக்க, ஏற்கனவே  எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை வரும் 31-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி பெற செய்வது குறித்து முக்கிய ஆலோசனையில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் 9 10 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடியே தேர்வுகள் நடைபெறும் என்றும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமல் நேரடி தேர்ச்சி வழங்குவது பற்றி பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை என தகவல் வெளியாகி  இருப்பது குறிப்பிடத்தக்கது